»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மக்களவைத் தேர்தலின்போது ஆராவாராமாய் தொடங்கப்பட்ட ஜக்குபாய் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் சிவாஜிபிலிம்ஸ் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார். அவருக்கு ஜோடி சிம்ரன் அல்லது ரீமா சென்னாம்.

இறைவா, நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பன்ச் லைனோடு ரஜினிவெளியிட்ட ஜக்குபாய் ஸ்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தேர்தல் நேரத்தில் தனது தரப்பு வாதம் (பா.ஜ.க.-அதிமுக கூட்டணிக்கு ஆதரவு) மக்களைச் சென்றடையும் வகையில் வெறும்பரபரப்புக்காகவே ஜக்குபாய் தொடங்கப்பட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தப் படம் அத்தோடுகைவிடப்பட்டுவிட்டது.

அதன் பிறகு கத கத கேளு என்று ஹரி, தேஜா என பல மொழி இயக்குனர்களையும் அழைத்து கதை கேட்டார் ரஜினி. ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை.

இந் நிலையில் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராம்குமார் (பிரபுவின் அண்ணன்) தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் ரஜினி நடிக்கப்போகிறார். படத்தின் பெயர் சந்திரமுகி !

படத்தை இயக்கப் போவது சின்னதம்பி பி.வாசு

நீண்ட காலமாக சொந்த தயாரிப்பிலேயே நடித்து வந்த ரஜினி வெளி நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கப் போவது இதுவே முதல்முறையாகும்.

அக்டோபர் 1ம் தேதி பூஜையைப் போட்டுவிட்டு நவம்பரில் சூட்டிங்கைத் தொடங்கப் போகிறார்களாம். ஜோடியாக சிம்ரனைப் போடவும்முடியாவிட்டால் ரீமா சென்னை புக் செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.

சென்டிமெண்ட் கதை மன்னரான பி.வாசு, நீண்ட நாட்களாய் தமிழில் படம் இல்லாமல் கன்னடப் பக்கம் போய்விட்டார். அங்கு இப்போதுஅவர் படு பிஸி. இப்போது ரஜினியை வைத்து இயக்கப் போகும் சந்திரமுகி படம் வாசுவுக்கு 50வது படமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil