»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil
நீண்ட காலத்துக்குப் பின் ரஜினியின் படமும், கமலின் படமும் நேரடியாக மோதப் போகின்றன.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் "சந்திரமுகி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று திரைக்குவருகிறது. இதே தினத்தில் கமலஹாசனின் சொந்தத் தயாரிப்பான "மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ரிலீசாகிறது.

ரஜினி மற்றும் கமலின் படங்கள் இப்படி ஒரே நாளில் ரிலீஸ் ஆவது நீண்ட நாட்களுக்குப் பின் நடக்கும் ஒரு சமாச்சாரம். (13ஆண்டுகளுக்குப் பின் என்கிறார்கள், இதை நம் வாசகர்கள் பலரும் மறுத்து இ-மெயில் அனுப்பியுள்ளனர்)

நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியும் கமலும் தமிழ் புத்தாண்டு தினத்தில் மோதுகின்றனர்.

சந்திரமுகி படம் காமெடி கலந்த த்ரில்லராகவும், மும்பை எக்ஸ்பிரஸ் காமெடி கலந்த ஆக்ஷன் படமாகவும் வெளி வருகிறது.

இரண்டிலுமே காமெடிக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளார்கள். சந்திரமுகியில் ரஜினியுடன் வடிவேலுவும், மும்பை எக்ஸ்பிரசில் கமலுடன்வையாபுரியும் கலக்கியுள்ளார்களாம். வையாபுரிக்கு இந்தப் படம் திருப்பமாக அமையும் என்கிறார்கள்.

இரு படங்களுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமையப்போவது ஒரு புறம் இருந்தாலும், இரண்டு படங்களும் வியாபாரத்திலும் பயங்கரசாதனை படைத்துள்ளதாம். ரஜினியின் சந்திரமுகி ரூ. 30 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

அதிலும் ராமதாஸ் ஏரியாவான மூன்று மாவட்டங்களில் தான் படத்தை கடும் போட்டி போட்டு வாங்கிச் சென்றுள்ளனர்வினியோகஸ்தர்கள்.

கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் இந்தியிலும் தயாராவதால் இரு மொழிகளிலும் நல்ல விலைக்கு போயுள்ளதாம். சந்திரமுகி 400பிரிண்டுகளுக்கு மேல் போடப்படுகிறதாம். இதே போல மும்பை எக்ஸ்பிரஸ் 300 பிரிண்டுகளுக்கு மேல் போடப்படுகிறது.

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை தமிழ்ப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக அதி நவீன தொழில் நுட்பமான டிஜிட்டல் முறையில் கமல்எடுத்துள்ளார். பிலிம் இல்லாமல் படத்தை எடுத்துள்ளார்கள்.

டிஜிட்டல் புரொஜெக்டர் இல்லாத தியேட்டர்களுக்கு மட்டும் பிலிமில் பிரிண்ட் போட்டு தரவுள்ளார்கள்.

வித்யாசாகரின் இசையில் வெளியாகியுள்ள சந்திரமுகியின் பாடல் கேசட் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.இதையடுத்த ஒரே நாளில் 2.5 லட்சம் கேசட்டுகளும், 50,000 சி.டி.க்களும் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு என்பதால் கேசட் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த இந்தி பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே, சிவாஜியைஅண்ணன் என்று குறிப்பிட்டு அவருடனான தனது நட்பு குறித்த நினைவுகளில் மூழ்கினார்.

தான் பாடிய முதல் படமான அமர்தீப்பை தயாரித்தது சிவாஜி புரொடக்ஷன்ஸ் தான் என்று குறிப்பிட்டதோடு, தன்னை பி.சுசீலாவின் ரசிகைஎன்று சொல்லி தன்னடகத்தையும் தன் பெருந்தன்மையையும் அழகாக வெளிப்படுத்தினார்.

மும்பை எக்ஸ்பிரஸ் பாடல் கேசட் வெளியீடு இம் மாத இறுதியில் வெளியிடப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா.

இதற்கிடையே ரஜினி படமும், தனது படமும் ஒரே நாளில் களமிறங்குவது குறித்து கமல் கூறுகையில், ரஜினிக்கும், எனக்கும் இருப்பதுவியாபார போட்டி. தனிப்பட்ட போட்டியல்ல. இது ஆரோக்கியமானது தானே என்றார்.

இரு பெருந் தலைகள் மோதுவதால் தியேட்டர் கிடைக்காமல் சில படங்கள் ஜகா வாங்கிக் கொண்டுள்ளன. இதில் அந்நியனும் அடக்கம்என்பது நம் வாசகர்களுக்குத் தெரிந்தது தானே.

Read more about: chandramugi, kamal, mumbai express, rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil