twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு எந்திரன் கமலுக்கு தசாவதாரம்... ரவிக்குமாரை மீண்டும் பழைய கதையை தூசி தட்டச் சொன்ன ரஜினி

    |

    சென்னை: நடிகர் ரஜினியை வைத்து தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் கமர்ஷியல் ஹிட்ஸ் கொடுத்த இயக்குநர்கள் என்றால் SP முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் KS ரவிக்குமார் ஆகிய மூவரைச் சொல்லலாம்.

    அதுவும் ரவிக்குமார் இயக்கிய படையப்பா திரைப்படத்தின் வசூல் சாதனை ஒரு பெரிய மைல் கல்லாக இருந்தது.

    அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல் அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்

    90-களில் உச்சத்தில் இருந்த இயக்குநர்களில் ரவிக்குமார் முக்கியமானவர். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என மூன்று தலைமுறையின் முன்னணி நடிகர்களை இயக்கிய ஒரே இயக்குநர் KS ரவிக்குமார் அவர்கள்தான்.

    ரஜினி - ரவிக்குமார்

    ரஜினி - ரவிக்குமார்

    நாட்டாமை திரைப்படத்தை பார்த்த ரஜினி, அந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆன போது விஜயகுமார் கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று தாமாகவே முன் வந்து நடித்தார். பாட்ஷா என்ற மிகப் பெரிய ஹிட் கொடுத்த ரஜினிக்கு அதை விட பெரிய வெற்றி தேவைப்பட்ட நிலையில் அவர் கண்ணில் பட்டவர்தான் ரவிக்குமார். அப்படித்தான் முத்து படம் உருவானது. படையப்பா மிகப் பெரிய வெற்றி என்றாலும் அதன் பின்னர் லிங்கா என்ற ஒரே ஒரு படத்தில்தான் ரஜினியை இயக்கினார் ரவிக்குமார்.

    எந்திரன் - தசாவதாரம்

    எந்திரன் - தசாவதாரம்

    தசாவதாரமும், எந்திரன் திரைப்படமும் தமிழ் சினிமாவின் முக்கிய படங்கள். பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட இரண்டு படங்களுள் ஒன்று இயக்குநர் ரவிக்குமார் இயக்கியது. மற்றொன்று ரஜினிகாந்த் நடித்தது. இந்த இரண்டு படங்களை விட பெரியதாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் தொடங்கிய படம்தான் ராணா.

    ராணா

    ராணா

    ராணா படத்தின் பூஜையன்றே ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் குணமானார். அதன் காரணத்தினாலேயே அந்தப் படம் கைவிடப்பட்டது. என்னதான் இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்திருந்தாலும், அதற்குப் பின் ஜக்குபாய் மற்றும் ராணா என்ற இரண்டு படங்களை தொடங்கி பின் கை விட்டனர். அதன் பின்னர்தான் லிங்கா உருவானது. சமீபத்தில் ரவிக்குமாரை அழைத்த ரஜினி, ராணா படத்தின் கதை மட்டும் ஞாபகமிருக்கிறது. திரைக்கதையை மீண்டும் சொல்ல முடியுமா என்று கேட்க, ரவிக்குமார் மீண்டும் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட ரஜினி,"பிரம்மாதமான கதை. இதை இப்போது எடுக்க இயலுமா?" என்று கேட்டதாக ரவிக்குமார் கூறியுள்ளார்.

    ஜெய்லர்

    ஜெய்லர்

    அடுத்ததாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் ரஜினி, பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு நெல்சனை மட்டுமே நம்பி இறங்காமல், அந்தக் கதையின் திரைக்கதையை வலுப்படுத்த ரவிக்குமார் அவர்களையும் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rajinikanth asked to Restart the shooting of Rana, Says Ravikumar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X