twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்தக் கதைக்கு ரஜினிதான் சரி... வைரமுத்து குறிப்பிட்ட கதை எது தெரியுமா?

    |

    சென்னை: கவிஞர் வைரமுத்து அவர்களைப் பற்றி தனிப்பட்ட அறிமுகம் ஒன்றும் தேவையில்லை என்றாலும், அவர் வாங்கிய விருதுகள் குறித்தோ எழுதிய நூல்கள் குறித்தோ பலருக்கும் தெரியாது.

    இதுவரை 7 தேசிய விருதுகள், 10 ஃபிம்ஃபேர் விருதுகள், 6 மாநில விருதுகள், 6 சைமா விருதுகள், பத்மஶ்ரீ, பத்மபூஷன், கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை குவித்துள்ளார்.

    கவிஞர் வைரமுத்து, வரலாற்றை அடிப்படையாகா வைத்து தான் எழுதிய நாவல் ஒன்றில் ரஜினி நடித்தால் சரியாக இருக்கும் என்று கூறி அதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

    இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல..அதள பாதாளத்தில் ஹன்சிகா..சிம்பு காரணமா?இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல..அதள பாதாளத்தில் ஹன்சிகா..சிம்பு காரணமா?

    வைரமுத்து

    வைரமுத்து

    மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு கவிஞர் வாலி நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். எந்திரன் படத்தின் இசை வெளியீட்டி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் எம்.ஜி.ஆருக்கு வாலி போல எனக்கு வைரமுத்து என்று அவரைப் பற்றி பெருமையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று தலைமுறை முன்னணி நடிகர்கள், முன்னணி இசையமைப்பாளர்கள் என அனைவருடனும் வெற்றிகரமாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

    பாடல்களை தவிர்த்த படைப்புகள்

    பாடல்களை தவிர்த்த படைப்புகள்

    பாடல்கள் மட்டுமின்றி நட்பு, துளசி, கேப்டன் உள்ளிட்ட சில படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். 1972-ல் வைகரை மேகங்கள் தொடங்கி 2019-ல் தமிழாற்றுப்படை வரை பல புத்தகங்களையும் இயற்றியுள்ளார். அதில் சில புத்தகங்கள் கன்னடம், மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    கள்ளிக்காட்டு இதிகாசம்

    கள்ளிக்காட்டு இதிகாசம்

    இலக்கிய உலகில் அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், வைரமுத்துவின் கவிதைகள் மற்றும் மூன்றாம் உலகப் போர் ஆகிய புத்தகங்கள் மக்கள் மத்தியில் பிரபலம். குறிப்பாக கள்ளிக்காட்டு இதிகாசம் 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பதிப்புகள் விற்கப்பட்டுள்ளது. மதுரையில் வைகை அணை கட்டும்போது அங்கிருந்து குடிபெயர்ந்த மக்கள் அனுபவித்த சிரமங்கள் பற்றி அந்த நாவல் பேசியது. இந்தக் கதை திரைப்படமானால் தில்லானா மோகனாம்பாள், ஏழை படும் பாடு போன்ற படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் கள்ளிக்காட்டு இதிகாசம் படத்திற்கும் கிடைக்கும் என வைரமுத்து கூறியுள்ளார்.

    ரஜினிதான் பொருத்தமானவர்

    ரஜினிதான் பொருத்தமானவர்

    70 வயது மதிக்கத்தக்க திராவிட நிறமுள்ள, இளைத்த தேகமுடைய உயரமான நபர்தான் அதில் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அவை அத்தனையும் நடிகர் ரஜினிகாந்திற்கு பொருந்தும். கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதில் நடித்தால் அவர் எதிர்ப்பார்க்கும் சம்பளம் கிடைக்காது. ஆனால் அவர் எதிர்ப்பார்க்காத விருதுகள் கிடைக்கும் என வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக ரஜினியிடம் அவர் ஒரு முறை பேசியுள்ளாராம்.

    English summary
    Rajinikanth is right for that Story.. Do you know Which Story Vairamuthu's is Talking About?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X