»   »  'கங்கிராட்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...', 'தேங்க்ஸ் கமல்!'

'கங்கிராட்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...', 'தேங்க்ஸ் கமல்!'

Written By:
Subscribe to Oneindia Tamil
நந்தி விருதுக்கு நன்றி.. டிவிட்டரில், ரஜினி-கமல் மாறி மாறி வாழ்த்து- வீடியோ

சென்னை: ஆந்திர மாநில அரசு 2016-ம் ஆண்டுக்காக ரஜினிகாந்துக்கு வழங்கியுள்ள என்டிஆர் விருதுக்கு கமல் ஹாஸன் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவருக்கு ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் என்டிஆர் விருது கமல் ஹாஸனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல 2016-ம் ஆண்டுக்கான என்டிஆர் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

பெருமைக்குரிய இந்த விருதுகளை வழங்கியதற்காக ஆந்திர அரசுக்கு ரஜினியும் கமலும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த விருதினைப் பெறும் இரு மாபெரும் கலைஞர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

முதல் வாழ்த்தை கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். அவர் பதிந்துள்ள ட்வீட்டில், "கங்கிராட்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 2016-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் என்டிஆர் விருது பெற்றதற்காக வாழ்த்துகள். இதே விருதினை எனக்கும் 2014-ம் ஆண்டுக்காக வழங்கியுள்ளார்கள். பெருமைக்குரிய இந்த விருதினை அளித்தமைக்கு ஆந்திர அரசுக்கு நன்றி," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், "தேங்க்ஸ் கமல், உங்களுக்கும் எனது வாழ்த்துகள்," என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினி - கமல் இருவரின் ட்வீட்டுகளையும் பார்த்து அவர்களின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

English summary
Rajinikanth and Kamal Haasan have congratulated each other for recieving Andhra's prestigious NTR award.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil