twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி நிஜத்திலும் பேசிய பஞ்ச் டயலாக்குகள் தெரியுமா?

    By Shankar
    |

    ரஜினி படத்தில் பன்ச் பேசுவார் தெரியும். ஆனால் படங்களை விட நிஜத்தில் நிறைய பன்ச் பேசியிருக்கிறார்.

    பஞ்ச் வசனங்கள் என்பது பெரும்பாலும் அவராகவே பேசுவதுதான். ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்ன மாதிரி என்பதே அவர் நிஜத்தில் பேசிய பஞ்ச்தான். பின்னர் அது நன்றாக இருக்கிறது என படத்தில் வைத்தார் இயக்குநர். அந்த வசனத்துக்கு கிடைத்த பாபுலாரிட்டி உலகறிந்தது...

    நிஜத்தில் அவர் பேசிய சில‌ பன்ச்களை பார்ப்போம்.

    என் ஸ்டார்... சூப்பர் ஸ்டார்

    என் ஸ்டார்... சூப்பர் ஸ்டார்

    ''சினிமா நிகழ்ச்சிக்காக ஒருமுறை மதுரை போயிருந்தப்ப, மீனாட்சி அம்மன்
    கோயிலுக்குப் போனோம். அங்கே எல்லாரும் பேர், பிறந்த நட்சத்திரம் சொல்லி
    அர்ச்சனை செஞ்சாங்க. கோயில் குருக்கள் என்கிட்ட, 'உங்க நட்சத்திரம்
    என்ன?'னு கேட்டப்ப, 'தெரியாது சாமி'னு சொன்னேன். பின்பு, ரசிகர்கள்
    எனக்கு 'சூப்பர் ஸ்டார்'னு ஒரு நட்சத்திரத்தைக் கொடுத்தாங்க. அந்த
    நட்சத்திர ராசியை கடைசி வரை காப்பாத்தணும்னு முடிவெடுத்தேன்!

    நட்பு

    நட்பு

    ''நான் கஷ்டப்பட்டபோதும், வசதியா இருக்கும்போதும் என்மேல ஒரே மாதிரி
    அன்பு செலுத்துற ராஜ்பகதூர், ஆச்சர்யமான நண்பன். ஆஞ்சநேயர் பக்கத்துல
    இருந்தா ராமனுக்கு அசுர பலம் சேரும். அதுபோல எனக்கு ஆஞ்சநேயரா இருந்த
    நண்பன் காந்தி. அவன் இறந்தது பெரிய இழப்பு!''

    சம்மர்

    சம்மர்

    ''சம்மர் வந்துட்டா, 'போன வருஷத்தோட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி'னு
    எல்லாரும் புலம்புறாங்க. ஆனா, அவங்களுக்கு ஒரு வயசு ஜாஸ்தி ஆகிருச்சு.
    அதனால உடம்பு அந்த அனலைத் தாங்க முடியலைங்கிறதை மறந்துடுறாங்க!''

    ஏன் இமயமலை?

    ஏன் இமயமலை?

    '' 'நான் யார்?'னு தெரிஞ்சுக்க எனக்குத் தனிமை தேவைப்படுது. அதனால
    இமயமலை போறேன். அது ரிஷிகள், முனிகள் தவம் செஞ்ச / செய்ற புண்ணிய பூமி.
    அங்கே 'நான் யார்?'னு என்னைச் சுலபமாக் கண்டுபிடிக்கிற வாய்ப்பு அதிகம்.
    அதான் அடிக்கடி போறேன்!''

    அப்ப என்ன செய்வீங்க?

    அப்ப என்ன செய்வீங்க?

    ' 'பாபா' படப்பெட்டிகளை அபகரித்து தகராறு செய்த ஒரு கட்சியைக் கண்டிச்சு
    கண்ணியமா கறுப்புக்கொடி காட்டினார்கள் என் ரசிகர்கள். அவங்களை அந்தக்
    கட்சிக்காரங்க அடிச்சிருக்காங்க. நான் அவங்களைப் பார்த்துக் கேட்கிறேன்,
    'மதுரையில இருக்குற ரசிகர்களை அடிக்கிறீங்க. சிங்கப்பூர், கனடா,
    அமெரிக்கா... என எல்லா நாட்லயும் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவாங்க.
    அப்போ என்ன செய்வீங்க?' ''

    எப்பவும் போராட்டம்தான்!

    எப்பவும் போராட்டம்தான்!

    'நீங்கள் நினைத்த இடத்தை அடைந்துவிட்டீர்கள். இனி ரிலாக்ஸ்தானே?' என்ற
    கேள்வியை ரஜினியிடம் எப்போது கேட்டாலும், ''இல்லை. இப்பவும்
    போராடிட்டுத்தான் இருக்கேன். ஆரம்பத்தில், இந்த அந்தஸ்தை அடையப்
    போராடினேன். இப்போ அந்தப் புகழுக்குக் களங்கம் வராமக் காப்பாத்தப்
    போராடிட்டு இருக்கேன். அப்பவும், இப்பவும்... எப்பவும் நமக்குப்
    போராட்டம்தான்!'' என்பார்.

    செவிட்டுத் தவளை

    செவிட்டுத் தவளை

    நான் ஒரு செவிட்டுத் தவளை.. யார் எதிர்ப்புப் பேச்சும் என் காதுக்குக் கேட்காது. மேலே மேலே போயிக்கிட்டே இருப்பேன்!

    என் ரசிகர்கள் பிரார்த்தனைக்குப் பவர் அதிகம்

    ''சிங்கப்பூர்ல ட்ரீட்மென்ட், மருந்து மாத்திரைகள் கொடுத்த டாக்டர்ஸ்,
    'நாங்க தர்ற மருந்துகள் நிறையப் பேர் உடம்பு ஏத்துக்காது. தவிர இவ்வளவு
    சீக்கிரம் யாருக்கும் க்யூர் ஆனதே இல்லை. உங்களுக்கு மட்டும் எப்படிக்
    குணமாகுது?'னு ஆச்சர்யமாக கேட்டாங்க. 'நீங்க கொடுக்கிற மருந்து
    மாத்திரைகளைவிட என் ரசிகர்கள் பிரார்த்தனைக்கு பவர் அதிகம். அதுதான்
    என்னைக் காப்பாத்துச்சு'னு சொன்னேன்!'

    தொகுப்பு: ராஜிவ்

    English summary
    Here is the compilation of Rajinikanth's punch dialogues in real life
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X