»   »  சோனியா பார்க்கும் மிஷன் 90

சோனியா பார்க்கும் மிஷன் 90

Subscribe to Oneindia Tamil

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள மலையாளப் படத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குப் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்துள்ளார் அப்படத்தை இயக்கியுள்ள மேஜர் ரவி.

ராணுவ அதிரடிப்படையில் இருந்தவர் மேஜர் ரவி. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிரடிப்படையில் இவரும் இடம் பெற்றிருந்தார். பெங்களூரில் ஒற்றைக் கண் சிவராசனும், சுபாவும் மறைந்திருந்த வீட்டை முற்றுகையிட்ட அதிரடிப்படையில் ரவியும் இடம் பெற்றிருந்தார்.

அப்போதைய தனி விசாரணைப் படைத் தலைவர் கார்த்திகேயன் செய்த தாமதத்தால்தான் சிவராசனை உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தர் ரவி என்பது நினைவிருக்கலாம்.

ரவி இப்போது ஒரு சினிமா இயக்குநர். அவர் இயக்கிய முதல் படம் அரண். இப்படத்தில் ஜீவா, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படம் ரிலீஸானது.

இந்த நிலையில், மிஷன் 90 டேஸ் என்ற பெயரில் புதிய மலையாளப் படம் ஒன்றை இயக்கியுள்ளார் ரவி. இப்படம், பெங்களூரில் சிவராசனைப் பிடிக்க நடந்த போராட்டத்தின்போது நடந்த சம்பவங்களின் அடிப்படையில், இப்படத்தை இயக்கியுள்ளார் ரவி.

இதுதவிர ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான முக்கிய அம்சங்களையும் இந்தப் படத்தில் இணைத்துள்ளாராம் ரவி. கடந்த வாரம் இப்படம் கேரளாவில் ரிலீஸானது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருப்பது பாலிவுட்டின் துலிப் ஜோஷி. தமிழில் அர்ஜூனுடன் ஒரு படத்தில் நடிக்க வந்து பாதியிலேயே ஓடிப் போனவர் தான் இந்த ஜோஷி (என்ன காரணமோ.. அர்ஜூனுக்கே வெளிச்சம்)

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இப்படத்தைப் போட்டுக் காட்டவுள்ளார் ரவி. சோனியா காந்தி படத்தைப் புரிந்து கொள்ள வசதியாக, ஆங்கில சப் டைட்டிலுடன் படம் அவருக்குக் காட்டப்படவுள்ளது.

இப்படம் குறித்து ரவி தட்ஸ்தமிழ் நிருபரிடம் கூறுகையில், இந்த வாரக் கடைசியில் சோனியாவுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே, ரவி முன்பு இயக்கிய அரண் (மலையாளத்தில் கீர்த்தி சக்ரா) படத்தின் 2வது பகுதியை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் ரவி. காந்தஹார் விமானக் கடத்தலை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கப் போகிறாராம். ஆனால் இப்படத்தில் அரண் படத்தில் நடித்த ஜீவா இல்லையாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil