»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தம் படத்தில் சிம்புவோடு ஜோடி சேர்ந்த ரக்ஷிதாவுக்கு இப்போது தான் அடுத்த தமிழ் படம் கிடைத்திருக்கிறது.மதுர படத்தில் விஜய்யோடு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். படத்தில் சோனியா அகர்வால். தேஜாஸ்ரீ ஆகியோர்இருந்தாலும் திம்சு கட்ட ரக்ஷிதாவின் ஆட்டமே டாக் ஆப் தமிழ்நாடாக இருக்கப் போகிறதாம்.

பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதாவுக்கு தமிழ் நினைத்த அளவுக்கு கை கொடுக்காததில் படு வருத்தம். இதைச்சொல்லித் தான் யாரைப் பார்த்தாலும் புலம்புகிறார்.

எனக்கு என்ன குறை? அழகாக இல்லையா, உயரமாக இல்லையா? எதற்காக தமிழ் சினிமா என்னைப்புறக்கணிக்கிறது என்று புலம்பும் ரக்ஷிதா இப்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் படு பிசியாகஉள்ளார். ஆனாலும் தமிழில் நடிக்கவே விருப்பமாம்.

மதுர படத்தைத் தொடர்ந்து தமிழில் எப்படியாவது காலூன்றிவிடும் முயற்சியில் இருக்கிறார். ஆனால் இந்தப்படத்தைத் தொடர்ந்து இதுவரை வேறு எந்தத் தயாரிப்பாளரும் அவரை சீண்டாததால் கோபத்தில் இருக்கிறார்.

அவருக்கு ஆறுதலாக தெலுங்குப் படமான சிவா 98480 22338 என்ற படம் தமிழில் டப் ஆகி வருகிறது. இந்தப்படத்தில் ஹீரோ நாகார்ஜூன். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று நடிக்கிறார். ஏறக்குறைய சாமி பட டைப்படம். இதில் நாகார்ஜூனுக்கு ஜோடியாக ஆஷின் மற்றும் ரக்ஷிதா நடித்திருக்கிறார்கள்.

படத்தில் ரக்ஷிதாவை விட ஆஷினுக்குத் தான் அதிக முக்கியத்துவம். ரக்ஷிதா சும்மா கவர்ச்சி ஊறுகாய். ஆனாலும்படத்தில் குறைச்சலான உடைகளுடன், நாகார்ஜூனுடன் ரக்ஷிதா காட்டியிருக்கும் நெருக்கத்தைப் பார்த்துஆந்திராவே ஆடிப் போயிருக்கிறது.

ரக்ஷிதாவின் கவர்ச்சியை நம்பி மட்டுமே தமிழிலும் படத்தை டப் செய்திருக்கிறார்களாம்.

இந்தப் படம் வெளிவந்த பிறகு தமிழில் நிறைய வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ரக்ஷிதா.

மதுர படத்தில் கதாநாயாகி சோனியா அகர்வால் தான் என்றாலும், ரக்ஷிதாவின் அளவுக்கு மீறிய ஒத்துழைப்பால்அவருக்கும் நிறைய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், தேஜாஸ்ரீயோடு ஒரு கவர்ச்சிப் போரேநடித்திருக்கிறாராம் ரக்ஷிதா.

மதுர படத்தைத் தொடர்ந்து சிவா 98489 22338 படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்ரக்ஷிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil