»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நட்சத்திர தம்பதிகளான ராமராஜன் - நளினி ஆகியோர் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இருவரும் சேர்ந்து வந்து நீதிமன்றத்தில் விவாகரத்துக்கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

காதல் திருமணம் செய்து 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ராமராஜன் - நளினி இப்போது பிரிகிறார்கள்.

கரகாட்டக்காரன் முதல் விவசாயி மகன் வரை கிராமத்துக் கதாநாயகன் வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ராமராஜன். அ.தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

உயிருள்ள வரை உஷா படத்தின் கதாநாயகியாக அறிகமான நளினிக்கும், ராமராஜனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொண்டனர்.முதல் பிரசவத்திலேயே இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த முதல் நடிகை என்ற பெயர் பெற்றார் நளினி. ஒன்று ஆண், இன்னொன்று பெண்ணாகபிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் இப்போது வயது 10.

13 ஆண்டு தாம்பத்திய வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு மகிழ்ச்சியுடன் பிரிய இருவரும் தீர்மானித்துள்ளனர். இவர்களுக்கு இடையே 1998-ம்ஆண்டு உருவான மனக் கசப்பு இப்போது விவாகரத்து அளவுக்கு போய் விட்டது.

இடையில் எத்தனையோ சமாதானப் பேச்சுகள் நடந்தன. அத்தனையும் குறுகிய காலத்திற்கு தான் பயன் அளித்தன. அதன் பின்னர் இருவரும் பிரிந்தேவாழ்ந்தனர். இப்போது முறைப்படி விவகாரத்து பெற்று விடும் முடிவோடு குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு இரண்டு பேரும் முழு விருப்பத்துடன் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு விசாரிக்கப்பட்டு 6 மாத அவகாசத்திற்குபின்னர் விவகாரத்து வழங்கப்படும்.

Read more about: chennai, divorce, nalini, ramarajan, tamilnadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil