»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

"ஓ மரியா, ஓ மரியா..." என்று "காதலர் தினம்" படத்தில் ரசிகர்களைக் கவர்ச்சி கடலில் மூழ்கடித்த ரம்பா இப்போதுஇன்னொரு படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடியுள்ளார்.

ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு பல பேர் ஒரு பாட்டு டான்சுக்கு அழைத்தும் கூட ரம்பா மறுத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது சூர்யா நடிக்கும் "ஸ்ரீ" படத்திற்காக ஒரு பாடலுக்கு ஆடியுள்ளாராம் ரம்பா. அதுவும் படுகவர்ச்சியாக. ஏன்?

கைவசம் அவ்வளவாகப் படங்கள் இல்லை. மேலும் சொந்தப்படம் வேறு தயாரித்து வருகிறார். இந்த சொந்தப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாக வேண்டுமானால் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும்அல்லவா?

இதற்காகவே ரசிகர்களை தன் (சொந்தப் படத்தின்) பக்கம் இழுப்பதற்காக "ஸ்ரீ"யில் கவர்ச்சி ஆட்டம்போட்டுள்ளாராம் "ரம்"பா .

"பெங்களூர் தக்காளி" அதிரடி திட்டம்:

"துள்ளுவதோ இளமை"யில் வாலிபப் பசங்களின் உள்ளங்களை துள்ள வைத்த "பெங்களூர்த் தக்காளி" செரீன்ரெட்டி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கப் போவதாக இளைஞர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

"துள்ளுவதோ இளமை"யில் கவர்ச்சிகரமாக நடித்திருந்தாலும் தொடர்ந்து அப்படியே நடிப்பேன் என்று எதிர்பார்க்கவேண்டாம்.

இருப்பினும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது கண்டிப்பாக என் படங்களில் இருக்கும் (அதத்தானே எதிர்பார்க்கிறோம்!)என்கிறார் இந்த 17 வயது "ஐஸ் கட்டி".

தொடர்ந்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவிலும் அவர் இருக்கிறாராம். தெய்வானை மூவிஸின்அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் செரீன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil