»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரம்பா எடுத்து வரும் த்ரீ ரோஸஸ் படம் ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருப்பது தெரிந்த கதை தான்.

தீபாவளிக்கு என்று சொல்லி, அடுத்த பொங்கலும் வந்து, தமிழ்ப் புத்தாண்டும் கூட வந்து போய்விட்டது.

டைரக்டர் கதையை சொதப்பியதால் படத்தைப் போட்டு பார்த்த ரம்பாவே டென்சனார். பின்னர் பஞ்சுஅருணாச்சலத்தை வைத்து புதிய கதை எழுத வைத்து அதை எடுத்து வருவது தெரிந்த கதை.

நினைத்ததைவிட பட்ஜெட் எக்குதப்பாகப போய்விட்டதால் செலவழிக்க கையில் காசில்லாமல் முழித்திருக்கிறார் ரம்பா.

அந்த நிலையில் தனது பூர்வீகமான தெலுங்குப் படவுலகில் சில தயாரிப்பாளர்களிடம் உதவி கேட்க அவர்கள்கையை விரித்துவிட்டார்களாம்.

வேறு வழியில்லாமல் இந்தப் படத்தில் தொடர்ந்து நடித்து வரும் ஜோதிகாவிடம்உதவி கேட்க ரம்பாவுக்கு மனம் இல்லை.

இன்னொரு ஹீரோயினான லைலாவோ ரம்பாவுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டுவிட்டார்.

இதனால் வேறு வழியின்றி தனது இந்தி நண்பரான நடிகர் கோவிந்தாவை நாடினார் ரம்பா.

தனது நிலையை எடுத்துச் சொல்லி ரம்பா கண்ணைக் கசக்க படத்துக்கு முதலீடு செய்வதோடு தேவைப்பட்டால்அதில் நடித்துக் கொடுக்கவும் கூட தயார் என்றார் கோவிந்தா.

இதையடுத்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்துஒரு பாட்டுக்கு தன்னுடன் டான்ஸ் ஆட வைத்துள்ளார் ரம்பா.

ஹீரோயின்கள் தான் இதுவரை ஒரு படத்துக்கு டான்ஸ் ஆடி வந்தார்கள்.

அதை கோவிந்தாவை வைத்து மாற்றிஇருக்கிறார் ரம்பா.

ஆடிய கையோடு பெரும் தொகையையும் தந்துவிட்டுப் போய் இருக்கிறாராம் ரம்பா.

இந்தப் பணத்தை வைத்துபடத்தை எப்படியும் முடித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் ரம்பா.

கோவிந்தாவுக்கு கால்ஷீட்களை அள்ளித் தந்து அவர் தந்த பணத்தை ஈடுசெய்ய ரம்பா திட்டமிட்டுள்ளாராம்.

இதனால் த்ரீ ரோஸஸ் முடிந்தவுடன் இந்தியில் சில படங்களில் ரம்பா கவர்ச்சி ஆட்டம் போடப் போவது நிச்சயம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil