»   »  தூண்டில் ரம்யா!

தூண்டில் ரம்யா!

Subscribe to Oneindia Tamil

கொஞ்ச காலத்திற்கு முன்பு கிளாமர் குத்தால் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த கன்னடத்து ரம்யா, மீண்டும் திரும்பி வருகிறார்.

குத்து படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ரம்யா. கர்நாடகத்து முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான ரம்யா, கிளாமர் தெனாவெட்டுடன் தெளிவாக இருந்தும் கூட அவரது அப்ரோச் சரியில்லாததால் பட வாய்ப்புகள் அவுட் ஆஃப் போகஸாகவே இருந்தது.

இதனால் கடுப்பான ரம்யா, தாய் மொழிக்குத் தாவினார். அங்கு அவருக்கு ரெட் கார்ப்பெட் விரித்து திறமைகளை முழுசாக பயன்படுத்தினர் கன்னத்து கணவான்கள்.

கன்னடத்துக்குப் போன பின் ரம்யாவின் மார்க்கெட் படு ரம்யமாக இருந்தது. இப்போது ரம்யா தான் கன்னடத்தில் நம்பர் ஒன் நடிகை. பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்கு திரும்புகிறார் ரம்யா.

கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்திலும், ஷாமுடன் தூண்டில் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ரம்யாவிடம் இதுகுறித்து கேட்டபோது,

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்க வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் கெளதம் சார் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

கன்னடத்தில் உங்களுக்கும், குண்டு பூசனிக்காய் ரக்ஷிதாவுக்கும்தான் போட்டியாமே என்றால் நோ சான்ஸ், கன்னடத்தில் ரக்ஷிதா எனக்கு போட்டி என்பதை ஏற்கமாட்டேன். அவரது நடிப்பு, தேர்வு செய்யும் படங்கள் வேறு. எனது நடிப்பும் படங்களும் வேறு. எனக்கு அவர் போட்டியே இல்லை என்றார்.

ஹொள்ளதாயித்து

Please Wait while comments are loading...