»   »  குத்து ரம்யாவின் ஏக்கம்!

குத்து ரம்யாவின் ஏக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வித்தியாசமான ஏக்கத்தில் இருக்கிறார் குத்து ரம்யா (இப்போது திவ்யா). அவரது ஆசை தாய்மொழியான கன்னடத்தில் லேட்டஸ்டாக நிறைவேறி ஏக்கம் தீர்ந்திருக்கிறாராம் ரம்யா.

குத்து மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களை கிளாமரால் குத்தியவர் கன்னடத்து இளங்கிளி ரம்யா. குத்து படத்தின் ஹிட்டால், அவரது பெயருக்கு முன்னால் குத்தை சேர்த்து விட்டனர் சினிமாக்காரர்கள்.

குத்து ரம்யா என்று கூறுவது தனக்கு அசவுகரியமாக இருப்பதாக உணர்ந்த ரம்யா, தனது பெயரை சமீபத்தில்தான் திவ்யா என மாற்றிக் கொண்டார். இருந்தாலும் எல்லோரும் இன்னும் குத்து ரம்யாதான் என்று செல்லமாக சொல்லி வருகிறார்கள் என்று செல்லமாக சிணுங்குகிறார் ரம்யா.

குத்து ரம்யா இப்போது கன்னடத்தில்தான் தீவிர கவனம் செலுத்துகிறார். இருப்பினும் தமிழில் தூண்டில் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஷாமுடன் இணைந்து தூண்டிலில் கிளாமர் தூண்டிலை வீசி, ரசிக மீன்களைப் பிடிக்க எத்தனித்திருக்கிறாராம் ரம்யா.

ரம்யாவுக்கு ரொம்ப நாட்ளாக ஒரு ஏக்கம் இருந்ததாம். மாடர்ன் பொண்ணான ரம்யாவுக்கு, பாவாடை, தாவணி என்றால் ரொம்பவும் இஷ்டமாம். 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி நடித்தது போல பாவாடை, தாவணியில் பட்டாம் பூச்சியாக ஆடிப் பாடி நடிக்க ரம்யாவுக்கு ரொம்ப நாளாக ஆசை.

ஆனால் அந்த வாய்ப்பே கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருந்தார். சமீபத்தில்தான் அந்த ஆசை கை கூடியதாம். அதுவும் தாய்மொழியான கன்னடத்தில் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது ரம்யாவுக்கு இரட்டிப்பு சந்தோஷமாகி விட்டதாம்.

கன்னடத்தில் உருவாகும் மீரா, மாதவா, ராகவா என்ற படத்தில் அப்படி ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறாராம் ரம்யா. படத்துக்குப் படம் இப்படி வித்தியாசமாகவே நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறாராம்.

குட், குட்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil