»   »  ரம்யா கிருஷ்ணனின் தேடல்

ரம்யா கிருஷ்ணனின் தேடல்

Subscribe to Oneindia Tamil

கணவர் கிருஷ்ண வம்சி இயக்கும் தெலுங்குப் படத்திற்கு தோதான ஹீரோயினை கண்டுபிடிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளாராம் ரம்யா கிருஷ்ணன்.

தமிழ், தெலுங்குத் திரையுலகை ஒரு காலத்தில் கலக்கோ கலக்கென்று கலக்கியவர் ரம்யா கிருஷ்ணன். பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், வயது போன காலத்தில் நீலாம்பரியாக நடித்த படையப்பா படம்தான் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

வயதை மீறிய நடிப்பாலும், கிளாமராலும் ரிடயர்மன்ட் வயசுக்குப் பிறகும் ஒரு ரவுண்டு அடித்து சாதனை படைத்தவர் ரம்யா. அதன் பின்னர் தெலுங்குப் பட இயக்குநர் கிருஷ்ணவம்சியை மணந்து கொண்டு செட்டிலானார் ரம்யா.

இப்போது அழகான ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்ட ரம்யா, கணவருக்குத் துணையாக மீண்டும் சினிமாவில் குதித்துள்ளார். கிருஷ்ணவம்சி புதிதாக ஒரு படத்தை இயக்கப் போகிறார். இது அவரது சொந்தப் படமாம்.

இந்தப் படத்திற்கு ஹீரோயின் தேடும் பொறுப்பை ரம்யாவிடம் விட்டு விட்டாராம் வம்சி. தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு வருகிறாராம் ரம்யா.

ஹீரோயின்களை ஏற்பாடு செய்து தரும் மீடியேட்டர்கள், பி.ஆர்.ஓக்களைத் தொடர்பு கொண்டு நல்ல ஆளாக இருந்தால் சொல்லுங்களேன் என்று கேட்டு வருகிறாராம் ரம்யா.

அத்தோடு நில்லாமல் தானும் பல பெண்களைப் பார்த்து செலக்ட் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். ரம்யாவுக்குத் துணையாக அவரது தங்கை வினயாவும் கூடமாட உதவியாக உள்ளாராம்.

படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பணியையும் வினயாதான் பார்த்துக் கொள்கிறாராம். நல்ல ஹீரோயினாக ரம்யா பார்த்துக் கொடுத்த பின்னர் படத்தைத் தொடங்கப் போகிறாராம் வம்சி.

இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்து அதை அப்படியே தமிழில் டப் செய்யும் திட்டம் உள்ளாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil