»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அப்பாடா, ஒரு வழியாக ரம்யாவும் குடும்ப சாகரத்தில் முழுமையாக நீந்தத் தொடங்கி விட்டார். அதாவது முழுகாம இருக்கிறாராம்.

தென்னிந்திய சினிமாவின் மார்க்கண்டேயனியான ரம்யா கிருஷ்ணன் நடிக்க வந்து 25 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. இன்னும் இளமை,புதுமையாக அவர் காட்டும் கவர்ச்சி, இந்தக் கால "பொடிசுகளையெல்லாம்" தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

இன்னும் கட்டுக் குலையாமல் கவர்ச்சியாலும், நடிப்பாலும் கலக்கி வரும் ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியைத்திருமணம் செய்து கொண்ட பிறகும் தனது கவர்ச்சி தரிசனத்தைக் கைவிடவில்லை.

கன்னடத்தில் அவர் நடித்த பா, பாரோ ரசிகா என்ற படம் கன்னடத்து இளசுகளிடம் சூட்டைக் கிளப்பி விட்டு மாபெரும் வெற்றியைப்பெற்றது. அந்தப் படத்தில் 35 வயதான பெண்ணாக ரம்யா நடித்தார். ஆண்களையே வெறுக்கும் ஒரு பெண் 15 வயது குறைவான ஒருபிஸ்கோத்து பையன் மீது காதல் கொள்வதே கதை.

திருமணத்துக்குப் பின் ரம்யா கிருஷ்ணன் மிகக் கவர்ச்சியாக நடித்த இந்தப் படம் கன்னடத்தில் 100 நாட்கள் ஓடியதால் தமிழிலும் வா, வாமன்மதா என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கன்னடத்திலும் தமிழிலும் அதே போன்ற கிச்சாங்க்ஸ் ரோல்களுடன் பல இயக்குனர்களும் ரம்யாவைவிரட்ட அவரோ இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். இதனால் கொஞ்ச நாளைக்கு படங்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு சுவிட்சர்லாந்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குப் போய் விட்டார்.

அங்கேயேதான் குழந்தையையும் பெற்றுக் கொள்ளப் போகிறாராம். அதன் பிறகுதான் இந்தியா வீட்டுக்குத் திரும்புவாராம்.

எல்லாரும் ஹனிமூனுக்கும், டூயட் பாடுவதற்கும்தான் சுவிஸ் போவார்கள். அம்மணியோ குழந்தை பெற்றுக் கொள்ள சுவிஸ் போயுள்ளார்.இந்தியாவின் "ஹீட்டும்", தனது படங்களின் "ஹாட்டும்", குழந்தையை பாதித்து விடக் கூடாது என்ற நினைப்போ?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil