»   »  நடிகை காவேரியை கைவிட்ட கணவர்-கற்பழிப்பு வழக்கு பதிவு

நடிகை காவேரியை கைவிட்ட கணவர்-கற்பழிப்பு வழக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil
Click here for more images
நடிகை காவேரியுடன் ரகசிய குடும்பம் நடத்தி, அவரை கர்ப்பிணியாக்கிவிட்டு கைவிட்ட ஒளிப்பதிவாளர் மீது கற்பழிப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைகாசி பொறாந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காவேரி. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இளம் நடிகையான அவர் இப்போது அக்கா, அம்மா கேரக்டர்களில் நடிக்கிறார்.

ஒரு வருடத்துக்கு முன் ஒளிப்பதிவாளர் வைத்தீஸ்வரனை ரகசிய திருமணம் செய்தார் காவேரி. இந்தத் திருமணம் முறைப்படி நடக்கவில்லை. ஆனாலும் அவருடன் தான் குடும்பம் நடத்தி வந்தார்.

இப்போது காவேரி கர்ப்பமாக இருக்கம் நிலையில் காவேரி கைவிட்டுவிட்டு தனது தாய்மாமன் மகளை செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் திருமணம் நாளை நடக்கவுள்ளதாக தெரியவந்ததையடுத்து போலீஸ் கமிஷனரை சந்தித்த காவேரி புகார் அளித்தார். அந்தத் திருமணத்தை தடுக்குமாறு ேகாரியுள்ளார்.

வைத்தீஸ்வரன் கோலிவுட்டின் பிஸியான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அவர் சமீபத்திய படங்களான மருதமலை, மலைக்கோட்டை ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

காவேரி அளித்த புகாரையடுத்து போலீஸார் விசாரணை நடத்தியதில் வைத்தீஸ்வரனுக்கும் அவரது மாமாவின் மகளுக்கும் நாளை திருச்சி அருகே உள்ள கீரனூரில் திருமணம் நடக்க இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து வைத்தீஸ்வரன் மீது கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வைத்தீஸ்வரனை கைது செய்ய தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், வைத்தீஸ்வரனை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதும் காவேரியிடம் இல்லை. நண்பர்கள் முன்னிலையில் ஒரு பிளாட்டில் வைத்து இருவரும் திருமணம் செய்தார்களாம்.

பின்னர் மேற்கு முகப்பேரில் ஒரு பிளாட்டில் இருவரும் குடும்பம் நடத்தியுள்ளனர்.

காவேரி கர்ப்பமானதையடுத்து அவருடன் பழகுவதை விட்டுவிட்ட வைதீஸ்வரன், 3 மாதமாக வீட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டதாக காவேரி தரப்பு கூறுகிறது.

காவேரியிடம் திருமண ஆதாரம் இல்லாததால் தான் போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்ததாகத் தெரிகிறது.

Read more about: cauvery

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil