»   »  சிரஞ்சீவி மகன் படம் ரெடி

சிரஞ்சீவி மகன் படம் ரெடி

Posted By:
Subscribe to Oneindia Tamil


ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்து அறிமுகமாகும் முதல் படமான சிறுத்தை ரிலீஸீக்கு ரெடியாகி விட்டது. வருகிற 28ம் தேதி ஆந்திராவிலும், சென்னையிலும் ஒரே நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்கிறார்களாம்.

சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து வரும் 3வது நடிகர் ராம் சரண் தேஜா. சிரஞ்சீவியைத் தொடர்ந்து முதலில் அவரது தம்பி பவன் கல்யாண் நடிக்க வந்தார். அண்ணன் அளவுக்கு இல்லாவிட்டாலும், பவனுக்கும் 'பெத்த' ரசிகர் கூட்டம் ஆந்திராவில் இருக்கிறது.

இந்த நிலையில் சிரஞ்சீவியின் மகனே நேரடியாக களம் இறங்குகிறார். தெலுங்குப் பட ஹீரோக்களுக்கே உரிய 'கெட்டப்புடன்' இருக்கும் ராம் சரண் தேஜா நடித்துள்ள முதல் படமான சிறுத்தை ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது.

இதில் அவருக்கு ஜோடி மும்பைக்கார நேகா.

பூரி ஜெகன்னாத் படத்தை இயக்கியுள்ளார். அஸ்வனிதத் தயாரித்துள்ளார். செப்டம்பர் 28ம் தேதி படம் தியேட்டர்களுக்கு வருகிறது. மணி சர்மா இசையமைத்துள்ளார். சினிமாவுக்காக ராம் சரண் தேஜாவின் பெயர் சரண் தேஜா என மாற்றப்பட்டுள்ளது.

இதையொட்டி ஆந்திரா முழுவதும் சிரஞ்சீவி ரசிகர்களும், பவன் கல்யாணின் ரசிகர்களும் உற்சாகமாக வேலைகளில் இறங்கியுள்ளனர்.

படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் பல்வேறு ஏற்பாடுகள் களை கட்டியுள்ளனர். பேனர் வைப்பதும், கட் அவுட் வைப்பதுமாக படு பிசியாக உள்ளனர்.

ஆந்திராவில் திரையிடப்படும் அதே நேரத்தில் சென்னையிலும் இப்படம் ரிலீஸாகிறதாம். சென்னையிலும் இதற்கான ஏற்பாடுகளை சிரஞ்சீவி ரசிகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil