Don't Miss!
- News
"தமிழ்நாட்டின் நலன் உங்கள் கையில்" அதிமுக தொண்டர்களை அலர்ட் செய்யும் திருமாவளவன்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பாலச்சந்தரை தன் படத்தை இயக்க வேண்டாம் என்று சொன்ன ரஜினி... காரணம் தெரியுமா
சென்னை: இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்களின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த திரைப்படம் அண்ணாமலை
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து பணிபுரிந்த முதல் திரைப்படம் இதுவே.
இந்தப் படத்திற்கு பின்னர்தான் வீரா, பாட்ஷா, பாபா போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக இருவரும் பயணித்தனர்
ரன்வீர் சிங்கோட அதைப் பத்தி வருத்தப்படுற அளவுக்கு நாம ஒன்னும்.. மூடர்கூடம் இயக்குநர் நவீன் ட்வீட்!

அண்ணாமலை
இந்தியில் வெளியான குட்கார்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் அண்ணாமலை. கேன் அண்ட் ஏபல் என்கிற நாவலை மையப்படுத்திதான் குட்கார்ஸ் திரைப்படமே எடுக்கப்பட்டது. அண்ணாமலைக்குப் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இந்த திரைப்படம் ரீமேக் ஆனது.

தேவாவின் தேனிசை
தமிழ் சினிமா துறையே இசைஞானி இளையராஜா பின்னால் இருந்தபோது இயக்குனர் பாலச்சந்தர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் மூன்று திரைப்படங்களை அறிவித்தார். மூன்றுமே இளையராஜாவின் இசை இல்லாமல். ரோஜா திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானையும், வானமே எல்லை திரைப்படத்தில் பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணியையும், அண்ணாமலை திரைப்படத்தில் தேவாவையும் ஒப்பந்தம் செய்தார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியில்தான் தேவா இந்த படத்திற்கு இசையமைத்து மிகப்பெரிய வெற்றி கண்டு இசை உலகில் தனது கொடிகட்ட ஆரம்பித்தார்.

விலகிய இயக்குநர்
முதலில் இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக பாலச்சந்தர் அவர்களின் மாணவரான வசந்த் தான் ஒப்பந்தமானார். ஆனால் வெளிவராத காரணத்தினால் படத்தின் படப்பிடிப்பிற்கு இரண்டு நாட்கள் முன் வசந்த் அந்த திரைப்படத்திலிருந்து விலகவே, படக்குழுவினர் சிரமத்திற்கு ஆளாகினர். அப்போது பாலச்சந்தர் நானே இந்தப் படத்தை இயக்குகிறேன் என்று ரஜினியிடம் கூற,"இல்ல வேணாம் சார். நீங்க வந்தீங்கன்னா என்னால நிக்க முடியாது, உக்கார முடியாது, யார்கிட்டயும் சிரிச்சு பேச முடியாது, சிகரெட் பிடிக்க முடியாது. அதனால நீங்க வேணாம்" என்று ரஜினி தாழ்மையுடன் பாலச்சந்தரை வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கதை விவாதம்
இரண்டே நாட்களில் வேறு இயக்குநரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வெவ்வேறு நபர்களிடம் பேசி இறுதியாக தனது இன்னொரு மாணவரான சுரேஷ் கிருஷ்ணாவை அந்த படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்தார். ரஜினியின் கால்ஷீட்டை வீண் செய்து விடக்கூடாது என்பதற்காக கதை விவாதத்தை விறுவிறுப்பாக ரஜினியை வைத்துக்கொண்டு நடத்த பாலச்சந்தர் திட்டமிட்டார். ரஜினியிடம் இதை கூறிய போது நான் எதற்கு என்று கேட்டாராம். அப்போது அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு தாய் தந்தை போல தனக்கு ஒவ்வொரு கட்டத்திலும் அறிவுரை வழங்கும் பாலச்சந்தர் அந்த படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொள்ள செய்தார். அதன் பின்னரே கதை விவாதம், மியூசிக் கம்போசிங் என்று தன்னுடைய படங்களில் தான் பங்கு பெற ஆரம்பித்ததாக ரஜினி கூறியுள்ளார்.