»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

செல்லமே படத்தில் கவியரசு வைரமுத்து கலக்கியிருப்பதை முன்பே நமது கேசட் விமர்சனத்தில்சொன்னோம். அதில் ஒரு பாடல், அதன் கிக் வரிகளால் படு பிரபலமாகியிருக்கிறது.

வைமுரத்துவின் அந்தப் பாடலுக்கு "அந்தப்புர அட்டகாசம்" என்றே பெயர் வைக்கலாம் போலிருக்கிறது.

கவிஞரின் பேனா, பாட்டுக்குப் பதிலாய் விரகதாபத்தையே கக்க, ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட மியூசிக்கில் ஆடிக்களைத்திருக்கிறார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா.

பாடல் வரிகளை அப்படியே ரீமா சென்னுக்கும் ஹீரோ விஷாலுக்கும் விளக்கமாய் சொல்லித் தந்து, முழுஉணர்ச்சி பொங்க நடிக்க வைத்திருக்கிறார்களாம். பாடல் எடுக்கப்பட்டபோது ரீமாவின் தாண்டவம் கண்டுயூனிட்டே கலங்கியிருக்கிறது.

அப்படி என்னதான் அந்த பாட்டில் எழுதியிருக்கிறார் வைரமுத்து.

வரிகள் இதோ...

பல்லவி

வெள்ளைக்கார முத்தம்
என் தேகம் எங்கும்
கொட்டிக் கொட்டித் தந்தான்
உயிர் கொள்ளை கொண்டான்

உச்சந்தலையில் அவன் இச்சு
முத்தத்தில் பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில் அவன் தந்த
முத்தத்தில்

சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட...

சரணம்-1

கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்
கொள்ளை மோட்சம் கொண்டேன்
செல்களின் வேர்களில்
தேன் சொட்டக் கண்டேன்

இழப்பது இங்கே
இன்பம் என்று கொண்டேன்
நஷ்டங்களே லாபம் என்னும்
கணிதங்கள் கண்டேன்

கொடுத்ததில் நிறைந்து விட்டேன்
பருவம் வந்ததும் உடைந்து மலர்ந்தேன்
பள்ளி அறையில் மறுபடி மலர்ந்தேன்


சரணம்- 2

முகம் கொண்டு தைத்தான்
மூச்சு முட்ட வைத்தான்
உடம்புக்குள் உயிர் உள்ள
இடம் கண்டு தொட்டான்

கட்டில் காடு என்றான்

கன்னி வேட்டை கொண்டான்

ஏன் உயிர் மட்டும் விட்டு விட்டு
ஒவ்வொன்றாய் சுட்டான்?

உச்சுக் கொட்டியே
உடைத்து விட்டான்

சிதறிக் கிடந்தேன்
சேர்ந்து எடுத்தான்

லயித்துக் கிடந்தேன்
லட்சியத்தை முடித்தான்

பாட்டு எப்படி? இந்தப் பாடலில் விஷாலும், ரீமா சென்னும் மிகவும் லயித்துப் போய் நடித்துள்ளார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil