»   »  2 பாட்டு 2 பஞ்சாயத்து! பாட்டை மாற்றச் சொன்னதால் நயனதாரவும், சேர்க்கச் சொன்னதால் ரீமா சென்னும் சர்ச்சையில் மாட்டியுள்ளனர். முதலில் நயனதாரா மேட்டர். ஈ என்றொரு படத்தில் ரொம்ப நாட்களாக நயனதாரா நடித்து வருகிறார். ஜீவாதான்இதில் நாயகன். இயற்கை என்ற அருமையான படத்தைக் கொடுத்த ஜனநாதன் தான் இப்படத்தை இயக்கிவருகிறார்.ஈ படம் ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்து வருவது குறித்து பலவித சர்ச்சைகள். நயனதாரா இழுத்தடிக்கிறார்என்பது தான் அதில் பலமான வம்புச் செய்தி. இதைப் பற்றி நயனதாராவிடம் கேட்டால், அய்யோஅப்படியெல்லாம் இல்லை. இந்தப் படம் எப்போதோ முடிந்திருக்க வேண்டும். தாமதத்திற்கு என்ன காரணம்என்று தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் இல்லை என்கிறார் பதட்டத்தோடு.அவரே மேலும் தொடர்ந்து, படத்தின் நாயகன் (ஜீவா) இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே அரண், பொறிஆகிய படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால்தான் தாமதமாகியிருக்க வேண்டும். அவர்கொடுத்ததால் நானும் 3 தெலுங்குப் படங்களுக்கு நடிக்கப் போய் விட்டேன். இதனாலும் தள்ளிப்போயிருக்கலாம். எப்படியும் அடுத்த மாதம் படம் வந்து விடும் என நம்புகிறேன் என்கிறார் நயனா.சரி, இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலின் வரிகள் ஆபாசமாக இருப்பதாக கூறி நடிக்க மறுத்துவிட்டீர்களாமே என்று நயனதாராவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அந்தப் பாட்டை நான் இதுவரைகேட்கவே இல்லை. அப்படி இருக்க நான் எப்படி மாற்றச் சொல்லியிருக்க முடியும். பாடல்களை மாற்றச்சொல்வது என் வேலையும் இல்லை என்கிறார்.தெலுங்குப் பட ஷூட்டிங்குக்கா கனடா செல்கிறாராம் நயனதாரா. அதை முடித்ததும் ஈ படத்திற்கு வருகிறாராம்.அதுவரை ரசிகர்கள் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியது தான்.அடுத்த மேட்டர் ரீமா சென். வல்லவன் படத்தில் இடையில் பஞ்சாயத்து செய்து பின்னர் சமரசமாகி மறுபடியும்நடித்துக் கொடுத்த ரீமா சென்னுக்காக, ஸ்பெஷலாக ஒரு பாட்டை சேர்த்துள்ளார் சிம்பு என்கிறார்கள்.ரீமா சொல்லித் தான் இந்த எக்ஸ்ட்ரா பாட்டு என்கிறார்கள். ஆனால் இதை ரீமா சென் மறுக்கிறார்.சமீபத்தில் ஒரு பாட்டை ஷூட் செய்தது உண்மைதான். நானும், சிம்புவும் அதில் ஆடியுள்ளோம். ஆனால்இந்தப்பாட்டை நான் சொல்லித்தான் சேர்த்தார் சிம்பு என்பது தவறு. இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள்என்று முன்பே சிம்பு சொல்லியிருந்தார். அதில் 2வது பாட்டைத் தான் சமீபத்தில் எடுத்தார்கள் என்கிறார் ரீமா.நம்புறோம்!

2 பாட்டு 2 பஞ்சாயத்து! பாட்டை மாற்றச் சொன்னதால் நயனதாரவும், சேர்க்கச் சொன்னதால் ரீமா சென்னும் சர்ச்சையில் மாட்டியுள்ளனர். முதலில் நயனதாரா மேட்டர். ஈ என்றொரு படத்தில் ரொம்ப நாட்களாக நயனதாரா நடித்து வருகிறார். ஜீவாதான்இதில் நாயகன். இயற்கை என்ற அருமையான படத்தைக் கொடுத்த ஜனநாதன் தான் இப்படத்தை இயக்கிவருகிறார்.ஈ படம் ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்து வருவது குறித்து பலவித சர்ச்சைகள். நயனதாரா இழுத்தடிக்கிறார்என்பது தான் அதில் பலமான வம்புச் செய்தி. இதைப் பற்றி நயனதாராவிடம் கேட்டால், அய்யோஅப்படியெல்லாம் இல்லை. இந்தப் படம் எப்போதோ முடிந்திருக்க வேண்டும். தாமதத்திற்கு என்ன காரணம்என்று தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் இல்லை என்கிறார் பதட்டத்தோடு.அவரே மேலும் தொடர்ந்து, படத்தின் நாயகன் (ஜீவா) இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே அரண், பொறிஆகிய படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால்தான் தாமதமாகியிருக்க வேண்டும். அவர்கொடுத்ததால் நானும் 3 தெலுங்குப் படங்களுக்கு நடிக்கப் போய் விட்டேன். இதனாலும் தள்ளிப்போயிருக்கலாம். எப்படியும் அடுத்த மாதம் படம் வந்து விடும் என நம்புகிறேன் என்கிறார் நயனா.சரி, இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலின் வரிகள் ஆபாசமாக இருப்பதாக கூறி நடிக்க மறுத்துவிட்டீர்களாமே என்று நயனதாராவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அந்தப் பாட்டை நான் இதுவரைகேட்கவே இல்லை. அப்படி இருக்க நான் எப்படி மாற்றச் சொல்லியிருக்க முடியும். பாடல்களை மாற்றச்சொல்வது என் வேலையும் இல்லை என்கிறார்.தெலுங்குப் பட ஷூட்டிங்குக்கா கனடா செல்கிறாராம் நயனதாரா. அதை முடித்ததும் ஈ படத்திற்கு வருகிறாராம்.அதுவரை ரசிகர்கள் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியது தான்.அடுத்த மேட்டர் ரீமா சென். வல்லவன் படத்தில் இடையில் பஞ்சாயத்து செய்து பின்னர் சமரசமாகி மறுபடியும்நடித்துக் கொடுத்த ரீமா சென்னுக்காக, ஸ்பெஷலாக ஒரு பாட்டை சேர்த்துள்ளார் சிம்பு என்கிறார்கள்.ரீமா சொல்லித் தான் இந்த எக்ஸ்ட்ரா பாட்டு என்கிறார்கள். ஆனால் இதை ரீமா சென் மறுக்கிறார்.சமீபத்தில் ஒரு பாட்டை ஷூட் செய்தது உண்மைதான். நானும், சிம்புவும் அதில் ஆடியுள்ளோம். ஆனால்இந்தப்பாட்டை நான் சொல்லித்தான் சேர்த்தார் சிம்பு என்பது தவறு. இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள்என்று முன்பே சிம்பு சொல்லியிருந்தார். அதில் 2வது பாட்டைத் தான் சமீபத்தில் எடுத்தார்கள் என்கிறார் ரீமா.நம்புறோம்!

Subscribe to Oneindia Tamil

பாட்டை மாற்றச் சொன்னதால் நயனதாரவும், சேர்க்கச் சொன்னதால் ரீமா சென்னும் சர்ச்சையில் மாட்டியுள்ளனர்.

முதலில் நயனதாரா மேட்டர். ஈ என்றொரு படத்தில் ரொம்ப நாட்களாக நயனதாரா நடித்து வருகிறார். ஜீவாதான்இதில் நாயகன். இயற்கை என்ற அருமையான படத்தைக் கொடுத்த ஜனநாதன் தான் இப்படத்தை இயக்கிவருகிறார்.

ஈ படம் ரொம்ப காலமாக தயாரிப்பில் இருந்து வருவது குறித்து பலவித சர்ச்சைகள். நயனதாரா இழுத்தடிக்கிறார்என்பது தான் அதில் பலமான வம்புச் செய்தி. இதைப் பற்றி நயனதாராவிடம் கேட்டால், அய்யோஅப்படியெல்லாம் இல்லை. இந்தப் படம் எப்போதோ முடிந்திருக்க வேண்டும். தாமதத்திற்கு என்ன காரணம்என்று தெரியவில்லை. ஆனால் நான் நிச்சயம் இல்லை என்கிறார் பதட்டத்தோடு.

அவரே மேலும் தொடர்ந்து, படத்தின் நாயகன் (ஜீவா) இந்தப் படத்தில் நடித்துக் கொண்டே அரண், பொறிஆகிய படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தார். இதனால்தான் தாமதமாகியிருக்க வேண்டும். அவர்கொடுத்ததால் நானும் 3 தெலுங்குப் படங்களுக்கு நடிக்கப் போய் விட்டேன். இதனாலும் தள்ளிப்போயிருக்கலாம். எப்படியும் அடுத்த மாதம் படம் வந்து விடும் என நம்புகிறேன் என்கிறார் நயனா.

சரி, இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலின் வரிகள் ஆபாசமாக இருப்பதாக கூறி நடிக்க மறுத்துவிட்டீர்களாமே என்று நயனதாராவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அந்தப் பாட்டை நான் இதுவரைகேட்கவே இல்லை. அப்படி இருக்க நான் எப்படி மாற்றச் சொல்லியிருக்க முடியும். பாடல்களை மாற்றச்சொல்வது என் வேலையும் இல்லை என்கிறார்.

தெலுங்குப் பட ஷூட்டிங்குக்கா கனடா செல்கிறாராம் நயனதாரா. அதை முடித்ததும் ஈ படத்திற்கு வருகிறாராம்.அதுவரை ரசிகர்கள் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

அடுத்த மேட்டர் ரீமா சென். வல்லவன் படத்தில் இடையில் பஞ்சாயத்து செய்து பின்னர் சமரசமாகி மறுபடியும்நடித்துக் கொடுத்த ரீமா சென்னுக்காக, ஸ்பெஷலாக ஒரு பாட்டை சேர்த்துள்ளார் சிம்பு என்கிறார்கள்.

ரீமா சொல்லித் தான் இந்த எக்ஸ்ட்ரா பாட்டு என்கிறார்கள். ஆனால் இதை ரீமா சென் மறுக்கிறார்.

சமீபத்தில் ஒரு பாட்டை ஷூட் செய்தது உண்மைதான். நானும், சிம்புவும் அதில் ஆடியுள்ளோம். ஆனால்இந்தப்பாட்டை நான் சொல்லித்தான் சேர்த்தார் சிம்பு என்பது தவறு. இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள்என்று முன்பே சிம்பு சொல்லியிருந்தார். அதில் 2வது பாட்டைத் தான் சமீபத்தில் எடுத்தார்கள் என்கிறார் ரீமா.நம்புறோம்!

Read more about: nayana and two songs, reema
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil