»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதல் முதலாக ஒரு பாடலை எழுதியுள்ளார் கங்கை அமரன்.

இளையராஜாவுக்கு மாற்றாக உருவாக பலரும் முட்டி மோதிக் கொண்டிருக்க சப்தமே போடாமல் வந்து சாதனை படைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மான் வந்த பிறகு அவர் குறித்து இளையராஜாவும், இளையராஜா குறித்து ரஹ்மானும் எந்தவித கருத்தும் கூறாமல் தவிர்த்து வருகின்றனர்.

இந் நிலையில் இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் மட்டும் தனது மேடை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது ரஹ்மானின்பாடல்களையும் பாடி வருகிறார்.

இப்போது ரஹ்மான் இசையில் பாட்டு எழுதியிருக்கிறார் கங்கை அமரன்.
விஜய் நடிக்கும் உதயா படத்திற்கு ரஹ்மான் தான் இசை. இந்தப் படத்திற்காக திருவல்லிக்கேணி ராணி, தெரியாதா எங்க பாணி, மனசெல்லாம்சுத்த வெள்ளை, அதனால தொல்லையே இல்லை கருத்துச் செறிவு மிக்க "அருமையான" பாடலை எழுதியிருக்கிறார் கங்கைஅமரன்.

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துலே!

மீண்டும் வருகிறார் ராணி முகர்ஜி

ஹே ராம் பிறகு மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ராணி முகர்ஜி.

விஜயகாந்த் நடிக்க மனோஜ் குமார் இயக்கவுள்ள ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் ராணி முகர்ஜி.

இதற்காக பெரும் தொகை ஒன்றை ராணி கேட்டாராம். முதலில் யோசித்தார் மனோஜ் குமார். கேப்டன் விஜயகாந்த் தலையிட்டு கொஞ்சம் போலக்குறைத்து ராணியை பேசி முடித்து விட்டார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil