»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரன் படத்திலிருந்து ரெய்மா சென் ஏன் தூக்கி வீசப்பட்டார் என்ற தகவல் பகிரங்கமாகியுள்ளது.

மாதவன் அ(ந)டிக்கும் அடிதடிப் படமான ரன்னில் நாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் ரெய்மா சென். இவர்"தாஜ்மஹால்" ரியா சென்னின் சகோதரி. அதாவது, முன்மூன் சென்னின் இன்னொரு புத்திரி.

ஷூட்டிங் ஆரம்பித்த நாளிலிருந்தே ரெய்மா சென்னை நடிக்க வைப்பதற்குள் படாதபாடு பட்டு விட்டாராம் டைரக்டர் லிங்குச்சாமி. உணர்ச்சியைக் காட்ட வேண்டிய காட்சிகளில் அப்படியே மரப்பாச்சி பொம்மை போல நிற்பாராம்.

வசனம் பேசச் சொன்னால் வாசிப்பாராம். ஓடச் சொன்னால் நடப்பது, ஆடச் சொன்னால் சும்மா கையை காலை தையாதக்கா என்றுஆட்டுவது, அழச் சொன்னால் எனக்கு அழுகை வராது... என்று என்ன்ெனவோ கொடுமைகள்.

ரெய்மா சென்னை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் லிங்குச்சாமி டென்ஷனாகி விட்டாராம். அடடா.. தப்புபண்ணிடோம்டா என்று எரிச்சான அவர் யோசிததிருக்கிறார்.

ஏற்கனவே ஒத்துழைப்பு பத்தவில்லை என்று சொல்லி ஹீரோ மாதவனும் அவரை மாற்றச் சொல்லி வற்புறுத்தி வந்தார்.

இதையடுத்து தயாரிப்பாளருடன் அவசரமாக கலந்து பேசி ரெய்மாவை டிஸ்மிஸ் செய்து விட்டார் லிங்கு. இப்போது அவரதுஇடத்தில் இருப்பது மலையாளத்து மலைக்குயில் மீரா ஜாஸ்மின் என்பது பழைய செய்தி.

இவர் நல்லா ஒத்துழைப்பு தருவதாக மாதவன் கூறுகிறாராம். எனக்கு நல்லா நடிச்சா போதும் என்கிறார் லிங்கு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil