»   »  'வேதா'வுக்கு இடைக்கால தடை

'வேதா'வுக்கு இடைக்கால தடை

Subscribe to Oneindia Tamil
Arun Vijay with Sheela

விஜய் அருண் நடித்துள்ள வேதா படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகர் அருண் நடித்துள்ள வேதா படம் திரையிடத் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த பைனான்சியர் டி.ஜி.ராஜாராம் என்பவர் வேதா படத்தை வெளியிட தடை விதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், வேதா படத்தின் தயாரிப்பாளர் வாசுதேவன் பாஸ்கர் என்னை அணுகி வேதா என்ற பெயரில் தமிழ் படம் தயாரிக்க இருப்பதாகவும் அதற்கு பண உதவி செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வேதா படத்தை தயாரிக்க 28 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன்.

இதற்காக இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்தத்தின் படி கடன் தொகையை 9 தவணைகளில் வட்டியுடன் திருப்பி தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் சில தவணைகள் மட்டும் சொலுத்தினார். பின்னர் செலுத்தவில்லை. இது தொடர்பாக தகவல் கொடுத்தும் எந்த பதிலுமில்லை. இன்றைய நாள் வரை படத்தின் தயாரிப்பாளர் வட்டியுடன் 26.64 லட்சம் திருப்பி தர வேண்டி உள்ளது.

இந்நிலையில், வேதா படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்தது. ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடுவதற்கு முன்பு கடன் தொகையை திருப்பி செலுத்துவதாக தயாரிப்பாளர் உறுதி அளித்திருந்தார்.

இப்போது அந்த ஒப்பந்ததை மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளார். படம் வெளியானால், நான் மிகவும் பாதிக்கப்படுவேன் எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் வேதா படத்தை வெளியிட நான்கு வாரக்காலத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil