»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மலையாளம், தெலுங்குப் படங்களில் ஒரு ரவுண்ட் முடித்துவிட்டு, ராஸ்கல் படம் மூலம் தமிழில் ஆஜராகியுள்ளார்ரேணுகா மேனன்.

கோலிவுட்டில் எல்லோரும் வருடத்திற்கு 4, 5 படங்களை ஒப்புக் கொண்டு அட்வான்ஸ்களை அள்ளி பாக்கெட்டில்போட்டிக் கொண்டிருக்க, இந்த ஜெயம் ரவி மட்டும் மிகவும் நிதானமாக அடி எடுத்து வைக்கிறார். ஜெயம் படம்ரிலீஸாகி ஹிட் ஆகி, 6 மாதங்களுக்குப் பிறகே எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தை ஒப்புக் கொண்டார்.

அந்தப் படம் நிதானமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியே மெதுவா போய்க்கிட்டிருந்தா ஜனங்க உங்களைமறந்துருவாங்க. பிறகு ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும், ஜெயம் படத்திலே நடிச்சாரே ரவி, அவர்தான்ஹீரோன்னு பிட் நோட்டீஸ் கொடுத்து ஞாபகப்படுத்த வேண்டியிருக்கும் என்று ரவியின் அபிமானிகள் சிலர்அவருக்கு யோசனை சொல்லியிருக்கிறார்கள்.

அதன் பின்பு சுதாரிப்பான ரவி, ராஸ்கல் என்ற படத்தில் நடிக்க தலையாட்டியுள்ளார். லஷ்மி மூவிமேக்கர்ஸ்தயாரிக்கும் இந்தப் படத்தில் ரவிக்கு ஜோடியாக ரேணுகா மேனன் என்ற கேரளப் பெண் அறிமுகமாகிறார். இவர்நடித்த நம்மல் என்ற படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட். இதனால் தெலுங்கு படவுலகம் இவரை வாரி எடுத்துக்கொண்டது.

ஹைதராபாத்திற்கும், திருவனந்தபுரத்திற்கும் மாறி, மாறி பறந்து கொண்டிருந்தவரை ராஸ்கல் படத்திற்காகசென்னையில் தரையிறங்க வைத்துள்ளார்கள். எல்லா கேரள அறிமுகங்களைப் போலவே, கவர்ச்சியானவேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவருகிறார். கையில் படம் எதுவும் இல்லாத போது இப்படிக் கூறுவாராஎன்று தெரியவில்லை.

ராஸ்கல் படத்தில் ரவி, ரேணுகா மேனுடன் பெப்சி விஜயன், வடிவேலு, சீதா, மோனிகா மற்றும் கும்தாஜ்நடிக்கிறார்கள்.

ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கை, காதல் வந்ததும் எப்படி சவால்நிறைந்ததாக மாறிப் போய்விடுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. அண்ணாமலை டிவி தொடருக்குதிரைக்கதை, வசனம் எழுதிய பாபு யோகேஸ்வரன், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிஇயக்குநராக அறிமுகமாகிறார்.

சென்னை, பொள்ளாச்சி, ஊட்டி ஆகிய இடங்களில் படம் தயாராகி வருகிறது. அண்மையில் பொள்ளாச்சி அருகேபடப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிகை கும்தாஜ் சென்னைக்கு ரயிலில் திரும்பியிருக்கிறார். ரயிலில் எதிர்சீட்டில்அமர்ந்திருந்த பயணி ஒருவர் கும்தாஜை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கிறதே என்று, நீங்க நடிகைதானேமேடம் என்று கேட்டிருக்கிறார்.

கும்தாஜ் ஆமாம் என்று சொல்லியிருக்கிறார். எந்தப் படத்தின் சூட்டிங் என்று பயணி கேட்க, அதற்கு கும்தாஜ்,ராஸ்கல் என்று சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். பயணிக்கு வந்ததே கோபம்.

பேசுவது இடைஞ்சலாக இருக்கிறது என்றால் சொல்ல வேண்டியதுதானே. அதற்கு ராஸ்கல் என்று திட்டுவதா?சினிமாக்காரங்கன்னா கொம்பா முளைத்திருக்கிறது என்று தாம் தூம்ன்னு குதிக்க, ரயிலேஅல்லோலகல்லோலப்பட்டிருக்கிறது.

பிறகு அதே பெட்டியில் பயணம் செய்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கோவிந்தராஜர் இடையே புகுந்துசமாதானம் செய்து வைத்திருக்கிறார். பின்பு படத்தின் பெயரைத்தான் கும்தாஜ் சொல்லியிருக்கிறார் என்பதைத்தெரிந்து பயணி அசடு வழிந்தது தனிக்கதை.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil