»   »  குடியரசு தினம்-மெகா டிவி சிறப்பு நிகழ்ச்சிகள்

குடியரசு தினம்-மெகா டிவி சிறப்பு நிகழ்ச்சிகள்

Subscribe to Oneindia Tamil
MEGA Tv

சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கிய மெகா டிவி, குடியரசு தினத்தை முன்னிட்டு இதுவரை இல்லாத பல புதிய சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி நேயர்களை மகிழ்விக்க இருக்கிறது.

இந்தியாவின் 58வது குடியரசு தினத்தை முன்னிட்டு மெகா டிவி வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்:

காலை 8 மணிக்கு காலத்தால் அழியாத நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற தேனிசை பாடல்களின் இனிய தொகுப்பாக சிறப்பு அமுத கானம் ஒளிபரப்பாகிறது.

காலை 10 மணிக்கு டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், காயத்ரி கிரீஸ் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பங்கேற்கும் தேச பக்தி பாடல்களின் பாராட்டும்-பரதமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

காலை 12 மணிக்கு கல்லூரியில் பயில்கின்ற விமானப்படை மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்களிடையே உள்ள நாட்டுப்பற்று உணர்வினை பறைசாற்றும் விதமாக, அவர்களின் பயிற்சி அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் இளம் இந்தியா நிகழ்ச்சி.

மாலை 6 மணிக்கு எனக்கு எப்போதும் ஆறுதல் அளிப்பது சென்னை பட்டணம் தான் என மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட சென்னை பட்டணத்தின் சுதந்திர போராட்ட கால வரலாற்றினை திரும்பிப் பார்க்கும் நினைவலைகளாக விடுதலை வேள்வி எனும் சிறப்பு நிகழ்ச்சி.

இரவு 7-30 மணிக்கு அறிவு சக்ரவர்த்தி ஜி.எஸ்.பிரதீப் வழங்கும் உற்சாகமான அறிவுப் போட்டியாக சிறப்பு பஞ்ச தந்திரம்.

இரவு 8 மணிக்கு பின்னனி பாடகி மகாநதி ஷோபனாவை பற்றியும், இசை தவிர்த்த மற்ற விஷயங்களில் அவருக்கு உள்ள ஆர்வங்களையும், விருப்பங்களையும் சுவாரசியமான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு அதிசய ராகம் நிகழ்ச்சி.

இரவு 10 மணிக்கு நாம் அறிந்தும், அறிந்திடாத ஆச்சரியமூட்டும் அரிய பல தகவல்களை அனைவரும் ரசிக்கும் விதத்தில் நகைச்சுவையுடன் கூறி சிரிக்கவைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கும் சிரிப்போம் சந்திப்போம் நிகழ்ச்சி.

மற்ற தனியார் தொலைக்காட்சிகளுடன் மெகா டிவியும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil