»   »  பிக் பீ ரேவதி வர்மா

பிக் பீ ரேவதி வர்மா

Subscribe to Oneindia Tamil

பத்திரிக்கையாளரும், ஜூன் ஆர் படத்தின் இயக்குநருமான ரேவதி வர்மா அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

கதை ஆசிரியையாகவும், பத்திரிக்கையாளருமாக அறியப்பட்டவர் ரேவதி வர்மா. உமன்ஸ் எரா உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் எழுதியுள்ளவரான ரேவதி வர்மா, ஜூன் ஆர் படத்தின் மூலமாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.

ஜோதிகா, சரிதாவை வைத்து அவர் இயக்கி ஜூன் ஆர் பல சர்ச்சைகளுக்கு இடையே வெளிவந்து சுமாராக ஓடியது. இந்த நிலையில் அடுத்ததாக அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் இயக்கவுள்ளார் ரேவதி வர்மா.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இது ஒரு ஆஃப் பீட் படமாக இருக்கும். கதையின் ஒன்லைனைக் கூறியதுமே அமிதாப் பச்சன் நடிக்க ஒத்துக் கொண்டார்.

இந்தியரான நாம் நமது நாட்டை எப்படி மதிக்கிறோம் என்பதுதான் படத்தின் ஒன் லைன். இப்படத்தில் அமிதாப் பச்சன் டாக்டராக வருகிறார். இளைஞர்களுக்கு நமது நாட்டின் பெருமையையும், மதிப்பையும் எடுத்துக் கூறுகிறார்.

ஜூன் ஆர் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதுகுறித்து நான் கவலைப்படவும் இல்லை. பணம் எனக்கு முக்கியமல்ல. நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே லட்சியம்.

படத்தின் டைட்டில், பிற கலைஞர்கள் குறித்த விவரம் மும்பையில் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றார் ரேவதி வர்மா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil