»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் நடிகைகளின் கற்பைப் பாதுகாக்க சங்கம் அமைக்கப் போவதாக ரேவதி அறிவித்துள்ளார்.

இதே போன்ற ஒரு அமைப்பை ஆந்திராவில் நடிகை ஜெயசுதா அமைத்துள்ளார்.

டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், ஸ்டண்ட் நடிகர்கள், சினிமா சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றும் சினிமாமுக்கியஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து நடிகைகளின் கற்பைக் காப்பாற்ற இந்த அமைப்பை அமைத்துள்ளதாகக்கூறும் ஜெயசுதா அதற்கு ஆஸ்ரா என்று பெயரிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவிலும் இந்த பிரச்சனைகள் ரொம்ப ஜாஸ்தி. இந் நிலையில், தமிழ் நடிகைகளை பாலியல்பலாத்காரத்திலிருந்து காக்கும் முயற்சியில் ரேவதி இறங்கியுள்ளார்.

இது குறித்து ரேவதி கூறுகையில், சாதாரண பெண்களுக்கு நல்ல சினேகிதிகள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவிஷயத்திலும் ஆலோசனை தந்து வழி நடத்துவார்கள்.

ஆனால், நடிகைகளுக்கு வெளியுலகத் தொடர்புகள் அறுந்து விடுகின்றன. இதனால், நடிகைகளுக்கு சினேகிதிகளேஇருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும் அவர்கள் உண்மையானவர்களாக இருக்க மாட்டார்கள்.

நல்ல நண்பர்கள் இல்லாத நிலையில் நடிகைகளைப் பாதுகாக்க ஒரு சங்கம் அமைத்தால் பெரிதும் உதவியாகஇருக்கும். இது குறித்து நடிகர் சங்கத்தில் பேசி விரைவில் சங்கம் ஏற்படுத்தப்படும் என்றார்.

சினிமா சான்சுக்காக சிலர் அப்படி இப்படி நடந்து கொள்வது உண்டு. ஆனால், நடிகைகளை ஏமாற்றி, அவர்களின்விருப்பங்களை மீறி தவறாகப் பயன்படுத்தும் ஆட்களிடம் இருந்து நடிகைகளைக் காக்க இந்த அமைப்புஉதவலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil