»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ரேவதி ஒரு படத்தை டைரக்ட் செய்கிறார். தமிழிலோ, மலையாளத்திலோ இல்லை. இது ஒரு ஆங்கிலப் படம். படத்தின் இயக்குனர் முதல் காமிராமேன்,பிற டெக்னசியன்கள அனைவருமே பெண்கள் தான். ஷேபனா தான் ஹீரோயின்.

கதை மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருக்கும் பிரியாவுடையது. காமிராமேன்(வுமன்) பெளசியா. அலைபாயுதே படத்தின் உதவிகேமிராவுமனாக இருந்தவர். மேக்அப்வுமனும் கூட பெண் தான். பெயர் ரீடா.

படம் அமெரிக்காவில் எடுக்கப்பட இருக்கிறது. அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்ட இரு தலைமுறை இந்தியர்களைப் பற்றியது தான் கதை.இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவிற்கு சென்று செட்டில் ஆன முதல் தலைமுறைக்கும், அவர்களுக்குப் பிறந்த இரண்டாவது தலைமுறைகுழந்தைகளுக்கும் இடையிலான இடைவெளி தான் கதை என்கிறார்கள்.

இந்த இரண்டாவது தலைமுறைக்கு இந்தியாவுடன் வேர்களோ, தொடர்புகளோ கிடையாது. ஆனாலும் அவர்கள் இந்தியர்கள். இதை எப்படிஎதிர்கொள்கிறார்கள், அவர்கள் சந்திக்கின்ற கலாச்சாரப் பிரச்சனைகள் என்ன என்ற சோசியல் தீம் தான் மையக் கருவாக இருக்கப்போகிறதாம்.

ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் தான் படத்தைத் தயாரிக்கிறார்.


இப்ப நாங்க ஒண்ணாயிட்டோம்- தேவானி, ஜோதிகா

தெனாலி பட சூட்டிங்கின்போது நிஜமாகவே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட தேவயானி- ஜோதிகா இருவரும் இப்போதுராசியாகிவிட்டனர்.

ஜோதிகாவின் வரவால் பாதிக்கப்பட்ட நடிகைகள் வரிசையில் தேவயானியும் ஒருவர். இந் நிலையில் தெனாலியில் கமலுக்குஜோடி ஜோதிகா, ஜெயராமுக்கு ஜோடி தேவயானி என்றவுடனே பிரச்சனை கிளம்பியது.

அதிலும் 2 குழந்தைகளுக்கு தாயாக வேறு நடிக்க வைத்துவிட்டார்கள். அதைவிடக் கொடுமை, ஜோதிகாவின் அண்ணியாகதேவயானியை நடிக்க வைத்தது. ரவிக்குமார்-கமல் படம் என்பதால் விடவும் முடியாமல் நடித்துச் சம்மதித்தார் தேவயானி.

ஆனால், மனதுக்குள் பூட்டி வைத்திருந்த வருத்தம் சூட்டிங்கின்போது வெடித்துவிட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிஅடிதடி வரை போயிவிட்டது நிலைமை. கமல் தலையிட்டு சமாதானம் செய்துவைத்ததாகத் தெரிகிறது.

இருந்தாலும் பட சூட்டிங் முழுவதும் இருவரும் சண்டைக் கோழிகளாகவே இருந்தனர்.

இப்போது திடீரென பழம் விட்டுக் கொண்டுள்ளனர்.என்னிடம் ஜோதிகா வருத்தம் தெரிவித்தார். பிரச்சனை ஓவர் என்கிறார்தேவயானி. எங்குக்குள் இருந்த சின்ன மன வருத்தத்தை பத்திரிக்கைகள் தான் பெரிதாக்கிவிட்டன.

ஒரு நாள் ஜோதிகா என்னிடம் வந்து நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். நீங்கள் மூத்த நடிகை. நான் தான் உங்களிடம்மரியாதையாக நடந்து கொண்டிருக்க வேண்டும். தவறு என் பக்கம் தான். நான் தான் குழந்தைத்தனமாக நடந்து கொண்டுவிட்டேன் என மனம் வருந்தினார்.

அவரது செயல் என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. நான் அவரை கட்டிப்பிடித்து விட்டேன். மன்னித்தும்விட்டேன்.இப்போது நாங்கள் நல்ல பிரண்ட்ஸ் ஆகிவிட்டோம் என்கிறார் தேவயானி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil