»   »  தமிழிலும் வருகிறது ஷோலே!

தமிழிலும் வருகிறது ஷோலே!

Subscribe to Oneindia Tamil

ராம்கோபால் வர்மா இயக்கிக் கொண்டிருக்கும் ஷோலே-2 படத்தின் ரீமேக், தமிழிலும் டப் ஆகி, ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸாகிறது.

ஜி.பி.சிப்பி 1970களில் தயாரித்து வெளியிட்ட மாபெரும் வெற்றிப் படம் ஷோலே. அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், அம்ஜத் கான், ஹேமமாலினி, ஜெயா பாதுரி ஆகியோரின் பிரமிப்பூட்டும் நடிப்பில் வெளியாகி பெரும் ஓட்டம் ஓடிய படம்தான் ஷோலே.

தற்போது இப்படத்தை ஆக் என்ற பெயரில் ராம் கோபால் வர்மா ரீமேக் செய்துள்ளார். இதில் அம்ஜத்கான் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இவர் தவிர அஜய் தேவகன், மோகன்லால், அமோஹா ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

இந்த வாரத்தில் ஆக் ரிலீஸாகிறது. இப்படத்தை தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ரிலீஸ் செய்கிறார் ராம் கோபால் வர்மா. தற்போது தமிழிலும் இதை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 30 வருடங்களுக்கு முன்பு ஷோலே வெளியானபோது பல தமிழர்களால் அப்படத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் இந்தி தெரியாததால்.

இந்த நிலையில், ஆக் படத்தை தமிழிலும் டப் செய்யத் திட்டமிட்டுள்ளேன். இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகும் அதே நாளில் தமிழிலும் இப்படம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil