»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நடிகர் ரகுவரன் பூட்ஸ் காலால் தன்னை எட்டி உதைத்து சித்திரவதை செய்ததாக அவருடைய மனைவியும்நடிகையுமான ரோஹிணி கூறியுள்ளார்.

கதாநாயகனாக அறிமுகமாகி, பின்னர் வில்லன் மற்றும் குணச்சித்திரம் என்று பன்முக நடிகர் என்று பெயர் வாங்கியரகுவரன் ஆறு ஆண்டுகளுக்கு முன் நடிகை ரோஹிணியைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன் இருந்த குடி, போதைப் பழக்கங்கள் இப்போதும் அவரைத் தொற்றிக் கொண்டதைத்தொடர்ந்து, தன் 5 வயது மகன் ரிஷியுடன் ரகுவரனை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் ரோஹிணி.

இதனால் ரகுவரன் மிகவும் "அப்செட்" ஆகியுள்ள நிலையில் ரோஹிணி நிருபர்களிடம் கண்ணீர் மல்க பேட்டிஅளித்துள்ளார். அவர் கூறுகையில்,

நல்ல நடிகர், திறமையானவர் என்றுதான் ரகுவரனை நான் திருமணம் செய்து கொண்டேன். குடி, போதை என்றுஅவற்றுக்கு அடிமையாகிவிட்ட அவரைத் திருமணத்திற்குப் பின்னர் திருத்தி விடலாம் என்று நினைத்தேன்.

அதே போலவே திருமணத்திற்குப் பின்னர் அவர் குடிப்பதை நிறுத்தி விட்டார். இருவரும் சந்தோஷமாகத்தான் புதுவாழ்க்கையைத் தொடங்கினோம்.

ஆனால் குடிப்பழக்கத்தால் அவருடைய உடல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது பின்னர்தான் தெரியவந்தது. அவர் வயிற்றில் உள்ள "பேங்க்ரியாஸ்" என்ற உறுப்பு பழுதடைந்திருந்ததும் எனக்குத் தெரிய வந்தது.

ஒரு சொட்டு மது குடித்தால் கூட அவருக்குக் கடுமையான வயிற்று வலி வந்து விடும். தண்ணீர் கொடுத்தால் அதைவாந்தி எடுத்து விடுவார் என்றும் வலி தெரியாமல் இருப்பதற்காகத் தூக்க மாத்திரை போடுவார் என்றும்பின்னர்தான் நான் தெரிந்து கொண்டேன்.

இருந்தாலும் திருமணத்திற்குப் பின்னர், இனிமேல் குடிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன். அவர்குடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே படப்பிடிப்புக்கு மட்டுமல்லாமல் வேறு எங்கு சென்றாலும் அவர்கூடவே நானும் செல்வேன்.

இதனால் நான் சினிமாவில் நடிப்பதைக் கூட நிறுத்தி விட்டேன். அடுத்த சில நாட்களில் மற்ற நடிகைகளுக்கு"டப்பிங்" பேசுவதையும் படிப்படியாக நிறுத்தினேன்.

அவரைக் கவனித்துக் கொள்வதற்காக பலமுறை வெளியூருக்குச் செல்ல நேர்ந்ததால் எனக்கு இரண்டு, மூன்று முறைஅபார்ஷன் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்தேன்.

இதனால் நான் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். அவரும் என்னை முழு ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறினார். நீங்கள் குடிக்கவே கூடாது என்று அவரிடம் கேட்டுக்கொண்டுதான் நானும் ஓய்வெடுத்தேன்.

ஆனால் அவரால் குடியை மறக்க முடியவில்லை. நான் அருகில் இல்லாத நேரங்களில் குடிக்கத் தொடங்கினார்.அவர் குடிக்கும் போதெல்லாம் வயிற்று வலி ஏற்படும். சிகிச்சைக்காக அவரைப் பலமுறை மருத்துவமனையில்சேர்த்திருக்கிறோம்.

குழந்தைக்காகவாவது குடியை நிறுத்துவார் என்று எண்ணியிருந்தோம். ஆனாலும் அவர் திருந்தவே இல்லை.எதற்கெடுத்தாலும் கோபப்படுவார். வாய்க்கு வந்தபடி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். கோபம் வந்தால்அவருடைய நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டு, பார்க்கவே பயங்கரமாக இருக்கும்.

ஆனால் எதையும் நான் என் பெற்றோரிடம் சொல்லவே இல்லை. நாமாகத்தானே கல்யாணம் செய்துகொண்டோம். நாமே அவரைத் திருத்தி சரி செய்துவிடலாம் என்று நினைத்தேன்.

இதற்கிடையே கே.கே. நகரில் நான் வாங்கிய வீடு, கார் ஆகியவற்றை அவர் கூறியதற்காக விற்றேன். ராஜாஅண்ணாமலைபுரத்தில் என் குடும்பத்தினருடன் நான் வாங்கிய நிலம் ஒன்று இருந்தது. அதில்தான் பின்னர் வீடுகட்டி வாழ்ந்தோம்.

அதன் பின் "டப்பிங்" பேசவெல்லாம் போக வேண்டாம் என்றார். நானும் நிறுத்தி விட்டேன். அவர் சொன்னதைஎல்லாம் கேட்டேன். ஆனாலும் அவர் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தினார்.

சமீபத்தில் கூட ஒரு "டப்பிங்" வாய்ப்பு வந்தது. நான் போவேன் என்று பிடிவாதம் பிடிக்கவே, அவர் அன்று இரவுநன்றாகக் கூடித்து விட்டு வந்து என்னை பூட்ஸ் காலால் மிதித்து சித்ரவதை செய்தார்.

சொத்துக்காகத்தான் நான் குழந்தையைக் கொண்டுவந்து விட்டதாக ரகுவரன் கூறுகிறார். அப்படியெல்லாம் ஒன்றும்இல்லை. என் துணிகளை மட்டும்தான் எடுத்து வந்தேன். எனக்கு சொத்து எதுவும் தேவையில்லை. என் மகன்மட்டுமே போதும்.

அவனுக்கும் குடிப்பழக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவனை என்னுடன் கூட்டிக் கொண்டுவந்துவிட்டேன். அவன் மிகவும் புத்திசாலி. அவனை சுத்தமாக வளர்க்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன் அவனைத் தன்னிடம் காட்டுமாறு போலீஸ் நிலையத்திலிருந்து போன் செய்துஅழைத்தார். நானும் கொண்டு சென்று காட்டினேன். அப்போது அவனைத் தன்னுடனே இருக்குமாறு கூறச் சொல்லிதிரும்பத் திரும்ப வற்புறுத்தினார்.

அவன் மீது மிகவும் அன்பாக இருப்பதாகக் கூறுகிறார். அது உண்மை என்றால் அவனை மீண்டும் வந்து தொந்தரவுசெய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனிமேலும் அவருடன் வாழ முடியாது என்ற நிலை வந்த பின்னர்தான் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன்.எனக்கு சொத்து வேண்டாம். எந்த வீடும் வேண்டாம். இப்படியே "சாய்பாபா சாய்பாபா" என்று கூறிக் கொண்டுஆசிரமத்தில் சேர்ந்து விடலாம் என நினைக்கிறேன்.

சில நடிகைகள் தற்கொலை செய்து கொண்ட போதெல்லாம் அதைக் கோழைத்தனம் என்று நான் கூறியது உண்டு.ஆனால் எனக்குக் கொடுமைகள் நேர்ந்தபோதுதான் அந்த வலியை என்னால் உணர முடிந்தது.

நானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன். அவர் கொடுமை செய்ததுதான் காரணம் என்று என்டைரியில் கூட எழுதி வைத்து விட்டேன். ஆனால் என் குழந்தையின் எதிர்காலம் என்னவாகுமோ என்றுபயந்துதான் அந்த முடிவைக் கைவிட்டேன்.

அவரிடம் நான் அனுபவித்ததெல்லாம் போதும். இனியும் தன்னுடன் வாழ வேண்டும் என்று ரகுவரன்வற்புறுத்தினால், விவாகரத்து வாங்குவதைத் தவிர வே வழியே இல்லை என்றார் ரோஹிணி.

Please Wait while comments are loading...