»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ரோஜா - இயக்குநர் செல்வமணி தம்பதி திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ளஆட்சீஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டனர். பின்னர் உமையாட்சீஸ்வரர் கோவிலில் மாவிளக்கு நெய் தீபம்ஏற்றியும் அவர்கள் வழிபட்டனர்.

கோவிலுக்கு எதிரே உள்ள நந்தி தேவர் சிலையின் காதில் பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகளை ஓதினால்அவை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. ரோஜா தம்பதியரும் அவ்வாறே நந்தி தேவர் சிலையில் காதில் ஓதிவழிபட்டனர்.

திருமணம் முடிந்ததும் இந்தக் கோவிலுக்கு வருவோம் என்று வேண்டியிருந்ததாகவும் அதனால் தான் தற்போதுவந்துள்ளதாகவும், கார்த்திகை மாத விரதம் இருந்து வருவதாகவும் செல்வமணி அப்போது கூறினார்.

ரோஜாவின் வருகையை அறிந்த ரசிகர்கள் அந்தக் கோவிலில் திரண்டனர். அவர்களுக்கு ரோஜா ஆட்டோகிராப்போட்டுக் கொடுத்தார்.

இதையடுத்து திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கும் ரோஜா-செல்வமணிதம்பதியர் சென்று கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

அந்தக் கோவிலில் ஏற்பட்ட பரணி தீபத் திருவிழாவில் இருவரும் கலந்து கொண்டனர். பக்தர்களோடு பக்தர்களாகஅவர்களும் வரிசையில் நின்று கொண்டு தான் சாமி தரிசனம் செய்தனர்.

அவர்கள் இருவருமே சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்தவிதமான பகட்டும் இன்றி சாதாரணமக்களைப் போலவே கோவிலில் வந்து வழிபட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil