For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா?

  |

  சென்னை: நடிகர், பாடகர், கவிஞர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது நடிப்பாலும் அசாத்திய திறமையாலும் அசத்தி வரும் நடிகர் தனுஷின் 38வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

  தோள் மேல் கை போட்டு பேசும் அளவுக்கு மகன்கள் வளர்ந்து விட்ட நிலையிலும், இப்பவும் அவர்களின் யூனிபார்ம் போட்டு துள்ளுவதோ இளமை பார்ட் 2வில் நடிக்க சொன்னாலும் நடிக்க கிளம்பி விடுவார் தனுஷ்.

  பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர் பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்

  மாமனார் ரஜினிகாந்த் வீடு இருக்கும் போயஸ் கார்டனில் தனுஷ் கட்டி வரும் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு 150 கோடி என்கின்றனர். நடிகர் தனுஷிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்து இங்கே காண்போம்.

  ஹேப்பி பர்த்டே தனுஷ்

  ஹேப்பி பர்த்டே தனுஷ்

  இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு மகனாக 1983ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி பிறந்த நடிகர் தனுஷ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அப்பா இயக்கத்தில் அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார் நடிகர் தனுஷ்.

  ஏத்திவிட்ட ஏணி

  ஏத்திவிட்ட ஏணி

  கடன் பிரச்சனையால் கஸ்தூரி ராஜா துவண்டு கிடந்த போது தம்பி தனுஷை ஹீரோவாக்கி அப்பாவுக்கு கதை எழுதி கொடுத்து குடும்பமே உயர ஏணியாக இருந்தவர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். மீண்டும் இருவரும் இணைந்து நானே வருவேன் (பெயர் மாற்றப்பட உள்ளது), ஆயிரத்தில் ஒருவன் 2 என கலக்க உள்ளனர்.

  சூப்பர்ஸ்டார் மருமகன்

  சூப்பர்ஸ்டார் மருமகன்

  காதல் கொண்டேன், புதுப்பேட்டை போல நடிப்புக்குத் தீனி போடும் படங்களில் நடித்து வந்த தனுஷ், திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், படிக்காதவன், யாரடி நீ மோகினி என கமர்ஷியல் வெற்றியையும் கொடுத்து வந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு மாப்பிள்ளை ரஜினிக்கே மாப்பிள்ளை ஆகி விட்டார்.

  50 கோடி சம்பளம்

  50 கோடி சம்பளம்

  கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலகம் முழுக்க பறந்து நடித்து வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக டோலிவுட்டில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் தனுஷுக்கு பேசப்பட்டு இருக்கிறதாம்.

  ஆழ்வார்ப்பேட்டை பங்களா

  ஆழ்வார்ப்பேட்டை பங்களா

  போயஸ் கார்டனில் காஸ்ட்லியான பங்களாவை கட்டி வரும் நடிகர் தனுஷ் தற்போது மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரு மகன்களுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்த பங்களாவின் மதிப்பு மட்டும் சுமார் 18 கோடி என்கிறார்கள். வீட்டைச் சுற்றி தோட்டம் இருக்கிறது.

  ரோல்ஸ் ராய்ஸ் கார்

  ரோல்ஸ் ராய்ஸ் கார்

  3.40 கோடி மதிப்பிலான பென்ட்லி கான்டினென்டல் ஜிடி கார் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ப்ரீமியம் பிளாக் கார் என இரு சொகுசு கார்களை வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை சுமார் 7 முதல் 8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

  தயாரிப்பு நிறுவனம்

  தயாரிப்பு நிறுவனம்

  நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, அசத்தும் நடனக் கலைஞராக கலக்கிய நடிகர் தனுஷ் வுண்டர்பார் பிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கி சட்டை மற்றும் விஜய்சேதுபதியின் நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களை தனுஷ் தயாரித்துள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

  போயஸ் கார்டன் பங்களா

  போயஸ் கார்டன் பங்களா

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் காஸ்ட்லியான பங்களாக்கள் இருக்கும் சென்னையின் ஹாட்டான ஏரியா போயஸ் கார்டனில் 19 ஆயிரம் சதுர அடியில் 4 மாடி ஹை கிளாஸ் பங்களாவை கட்டி வருகிறார் நடிகர் தனுஷ். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜையுடன் வீடு கட்டும் பணி தொடங்கியது. சுமார் 150 கோடி ரூபாய்க்கு வீடு கட்டப் போகிறார் தனுஷ் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நிஜமாவே இது ‘அசுர' வளர்ச்சி தானே!

  Read more about: dhanush தனுஷ்
  English summary
  Actor Dhanush who has turned 38 today has so many costly and luxurious things in his hands. We have listed out some of them here.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X