twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    22 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்யின் குஷி...எஸ்.ஜே.சூர்யா இப்படி பண்ணிருக்காரே

    |

    சென்னை : விஜய், ஜோதிகா நடித்த பிளாக்பஸ்டர் படமான குஷி, ரிலீசாகி இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் அந்த படத்தின் டைரக்டரான எஸ்.ஜே.சூர்யா செய்துள்ள காரியம், என்ன இவர்...இப்படி செய்திருக்கிறார். இவரது ரியாக்ஷன் இது தானா என அனைவரையும் கேட்க வைத்துள்ளது.

    தமிழ் சினிமாவில் டைரக்டராக அறிமுகமாகி நடிகரானவர்களில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவர். குஷி, வாலி உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா பிறகு ஹீரோவானார். இந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை தராத நிலையில், திடீரென மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார்.

     கைதி நான் பண்ண வேண்டிய படம்... கார்த்தி நடித்ததற்காக வருத்தப்படல.. நடிகர் விஜய் சேதுபதி! கைதி நான் பண்ண வேண்டிய படம்... கார்த்தி நடித்ததற்காக வருத்தப்படல.. நடிகர் விஜய் சேதுபதி!

    எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகி வருகின்றன. வில்லன், ஹீரோ என படத்திற்கு படம் மாறி மாறி நடித்து அசத்தி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. சமீபத்தில் கூட ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ஆரம்பத்தில் உங்கள் படங்களை பார்த்த போது, வராத நடிப்பை ஏன் இவர் வம்பாக பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார் என தோன்றியது. ஆனால் தற்போது நடிப்பில் பின்னி எடுத்து வருகிறீர்கள் என பாராட்டி இருந்தார். இதையும் எஸ்.ஜே.சூர்யா ரீட்வீட் செய்திருந்தார். மற்றொரு ரசிகர், நீங்கள் வில்லனாக நடிக்கும் படங்கள் அனைத்தும் செம ஹிட் ஆகுது. என்ன டிசைன் இது என மீம்ஸ் போட்டிருந்தார். அதையும் ரீட்வீட் செய்து, லைக் செய்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

    டாப் லிஸ்டில் குஷி

    டாப் லிஸ்டில் குஷி

    விஜய், ஜோதிகாவை வைத்து 2000 ம் ஆண்டு ரொமான்டிக் காமெடி படமாக குஷி படத்தை இயக்கி இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. ஏ.எம்.ரத்னம் இந்த படத்தை தயாரித்திருந்தார். தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் மாஸ் ஹிட் அடித்தன. குஷி படம் 2000 ம் ஆண்டு மே 19 ம் தேதி சம்மர் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யப்பட்டது. 2000 ம் ஆண்டில் மெகா ஹிட்டான படங்களின் டாப் லிஸ்டில் குஷி படமும் உண்டு.

    அனைத்து மொழிகளிலும் ஹிட்

    அனைத்து மொழிகளிலும் ஹிட்

    பிறகு இந்த படம் 2001 ல் குஷி என்ற பெயரிலேயே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. பவன் கல்யாண், பூமிகா இந்த படத்தில் நடித்திருந்தனர். பிறகு இந்தியிலும் போனி கபூர் தயாரிப்பில் குஷி என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டு, அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆனது. ஆனால் 2005 ம் ஆண்டு குஷி படத்தின் அடுத்த பாகம் என சொல்லி எஸ்.ஜே.சூர்யா இயக்கி, தானே ஹீரோவாக நடித்த அன்பே ஆருயிரே படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

    இது தான் கதை

    இது தான் கதை

    சிறு வயதிலேயே எதிர்பாராத விதமாக சந்தித்து கொள்ளும் இரண்டு குழந்தைகள், பிறகு வளர்ந்த பிறகு ஒரே கல்லூரில் எதிர்பாராத விதமாக ஒன்றாக படிக்கிறார்கள். ஆரம்பத்தில் மோதலில் துவங்கி, பிறகு நட்பாகி, பிறகு காதலாக மலர்கிறது. கடைசியில் அவர்கள் எப்படி வாழ்க்கையில் ஒன்று சேர்க்கிறார் என்பது தான் கதை. இதை மாஸ் ஹிட்டாக்கி, கமர்ஷியல் ஹிட் கொடுத்தார்.

    எஸ்.ஜே.சூர்யா செய்த காரியம்

    எஸ்.ஜே.சூர்யா செய்த காரியம்

    தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இருக்கும் குஷி படம் ரிலீசாகி 22 வருடங்கள் நிறைவடைந்ததை பலரும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் ரசிகர்களின் ட்வீட்டிற்கு கூட தவறாமல் ட்வீட் போடும் எஸ்.ஜே.சூர்யா, குஷி படம் பற்றி எதுவும் பதிவிடவில்லை. இது பலருக்கும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதே சமயம், சில மீடியாக்கள் குஷி படம் 22 ஆண்டுகளை நிறைவு செய்த தகவலை வெளியிட்டுள்ளதை எஸ்.ஜே.சூர்யா ரீட்வீட் மட்டும் செய்துள்ளார்.

    English summary
    Today Vijay's Kushi completes 22 years of theatrical release. This movie released in May 19th, 2000. Later this block buster movie has been remake in telugu and hindi. Many medias covered 22 years of Kushi film. But S.J.Suriya didn't post a single tweet about this movie. Rather he retweet other media news.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X