»   »  கலக்கும் சாவரியா, ஓம் சாந்தி ஓம்!

கலக்கும் சாவரியா, ஓம் சாந்தி ஓம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ள ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம், பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் ஹிட் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு பெரும்பாலான தியேட்டர்களில் முடிந்து விட்டதாம்.

ஷாருக்கான், இளம் புயல் தீபிகா படுகோண் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் சாந்தி ஓம், படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இது டான்ஸ் மாஸ்டர் பாரா கானின் படம்.

ஷாருக்கானின் கலக்கல் டான்ஸ், கவர்ச்சி மிகு நடிப்பு ஆகியவற்றுடன், தீபிகாவின் எடுப்பான அழகும் சேர்ந்து படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எகிற வைத்துக் கொண்டிருந்தது.

இன்று இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய அளவில் ஷாருக்கானின் இப்படம் ரிலீஸாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ரஜினியின் சிவாஜிக்குப் பிறகு, இந்தியாவைக் கலக்கும் வகையில் வெளியாகியுள்ள படம் ஓம் சாந்தி ஓம்.

இதேபோல தீபாவளிக்கு வந்துள்ள இன்னொரு படம் சாவரியா. அனில் கபூரின் மகள் சோனம் கபூரும், ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூரும் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த இரு படங்களும் திரைக்கு வந்துள்ளன. இரு படங்களுக்கும் பாலிவுட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக ஓம் சாந்தி ஓம் படம் திரையிட்ட தியேட்டரெல்லாம் விழாக் கோலமாக உள்ளது. அதற்கு நிகராக சாவரியா படத்திற்கும் செமத்தியான ரெஸ்பான்ஸாம்.

சஞ்சய் லீலா பன்சாலியின் சாவரியா, இளமை ததும்பும் படமாக, இனிய பாடல்களுடன் வெளியாகியுள்ளது. இதனால் இளசுகள் கூட்டம் தியேட்டர்களில் அலை மோதிக் கொண்டிருக்கிறது.

இரு படங்களுக்கும் ஒரு மாதம் வரை டிக்கெட்டுகள் முன்பதிவாகி விட்டனவாம். இரு படங்களும் பெரும் வசூலை வாரி அள்ளும் என்று பாலிவுட் நம்பிக்கை தெரிவிக்கிறது.

பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அட்வான்ஸ் புக்கிங் என்பது படு மந்தமாக இருந்து வந்தது. க்ருஷ் மற்றும் தூம்2 ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே அட்வான்ஸ் புக்கிங் செய்ய கூட்டம் அலை மோதியது.

தற்போது அந்த நிலை மீண்டும் திரும்பியுள்ளதாம். ஓம் சாந்தி ஓம், சாவரியா ஆகிய இரு படங்களுக்கும் அட்வான்ஸ் புக்கிங் செய்ய ரசிகர்கள் அலை மோதுகின்றனராம். இதனால் இந்தி திரையுலகம் சந்தோஷமாகியுள்ளது.

டெல்லியில் ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் முடிந்து விட்டனவாம். டெல்லியில் உள்ள பெரும்பாலான மல்ட்பிளக்ஸ் தியேட்டர்களில் ஓம் சாந்தி ஓமும், சாவரியாவும் தினசரி எட்டு முதல் 10 காட்சிகளாக ஓட்டப்படுகின்றன.

நமீதா பிறந்த சூரத் நகரில் ஒரே நாளில் அட்வான்ஸ் புக்கிங் மூலம் ரூ. 4 லட்சம் வசூலாகியுள்ளதாம்.

இரு படங்களும் பெரும் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாலிவுட் சந்தோஷத்துடன் தீபாவளியை கொண்டாடி வருகிறது.

Read more about: bollywood om shanti om saawariya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil