»   »  புத்தாண்டுக்கு சதா ஆட்டம்

புத்தாண்டுக்கு சதா ஆட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sadha
சென்னையில் டிசம்பர் 31ம் தேதி கண்ட்ரி கிளப் இந்தியா லிமிட்டெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சதா பங்கேற்று ஆட்டம் போடப் போகிறாராம்.

ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கி வருகிறது. பல மாநகரங்களில் இன்றே அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது. இப்போதே பலரும் எப்படியெல்லாம் கொண்டாட்டத்ைதத் தூள் கிளப்பலாம், எங்கெங்கு போகலாம் என்று டிஸ்கஷனை ஆரம்பித்து விட்டனர்.

மக்களின் மன நிலையை அறிந்து சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்கள், கிளப்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பான ஏற்பாடுகள், திட்டமிடுதல்கள் தொடங்கி விட்டன.

அந்த வகையில், கண்ட்ரி கிளப் பொழுதுபோக்கு கிளப் 2008ம் ஆண்டு படு சிறப்பாக வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது அந்த கிளப்பின் 18வது ஆண்டு விழா என்பதால் ஏற்பாடுகள் படு வெகு சிறப்பாக இருக்குமாம்.

இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பல கவர்ச்சிக் கன்னிகள் பங்கேற்று பட்டையைக் கிளப்பப் போகிறார்களாம். மலைக்க வைக்கும் மலாய்கா அரோரா, நெகு நெகு நேஹா தூபியா, அசத்தலான அம்ரிதா அரோரா, ரிமி சென், உதிதா கோஸ்வாமி, மகிமா செளத்ரி என பெரிய பட்டியேல உள்ளது.

இதில் நம்ம ஊர் சதாவும் இடம் பிடித்திருக்கிறார். உஷா உதுப்பின் பாடல்களும் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

சதாவுக்கு கொண்டாட்ட வாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதாவது கண்ட்ரி கிளப் உறுப்பினர்களுக்கு வைக்கப்பட்ட போட்டியின் மூலம் சதா கொண்டாட்ட நாயகிகள் வரிசையில் சேர்ந்துள்ளாராம்.

நமது கிளப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் யார் இடம் பெற வேண்டும் என கிளப் உறுப்பினர்களுக்கு போட்டி வைக்கப்பட்டதாம். சதாவை நிறைய பேர் பங்கேற்க தேர்வு செய்ததால் அவரை கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளனராம்.

கண்ட்ரி கிளப்பின் டெல்லி கிளையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மலாய்கா அரோரா பங்கேற்கவுள்ளார். பெங்களூருக்கு அமிர்தாவும், மும்பைக்கு ரிமியும், கொல்கத்தாவுக்கு நேஹா தூபியாவும், அகமதபாதாத்தில் மகிதா செளத்ரியும், புனேயில் உதிதாவும், ஹைதராபாத்தில் உஷா உதுப்பும் பங்கேற்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil