»   »  சதாவின் அடுத்த அத்தியாயம்

சதாவின் அடுத்த அத்தியாயம்

Subscribe to Oneindia Tamil

தமிழ், தெலுங்கை ஒரு கை பார்த்து விட்ட திருப்தியுடன் சதா மலையாளத்திற்குள் நுழைந்துள்ளார்.

தெலுங்கு மூலம் தமிழுக்கு வந்தவர் பெங்களூரு தந்து நாவல் கனி சதா. தெலுங்கில் சதா நடித்த முதல் படம் சித்ரம். தேஜா இயக்கினார். இப்படம் அவருக்கு பெரும் பெயரை வாங்கி்த் தரவே, ஜெயம் படத்தில் நடித்தார். இது தமிழிலும் ரீமேக் ஆனது.

ஜெயம், ஜெயித்த பின்னர் சதா, டிமாண்டுக்குரிய நாயகி ஆனார். ஆனால் அவர் போட்ட கண்டிஷன்களும், காட்டிய பந்தாக்களும், செய்த சில்மிஷங்களும் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் இம்சிக்க, சதாவை சாதா நடிகையாக்கி விட்டது.

அந்நியனை ரொம்பவே நம்பியிருந்தார் சதா. ஆனால் அது சதாவை கைவிட்டு விட்டது. யாரும் சீண்டாததால் அப்செட் ஆகிப் போன சதா,தனது பழைய பந்தாக்களைக் குறைத்துக் கொண்டு, அமைதியாக வாய்ப்பு தேடினார்.

ஆனாலும் துரதிஷ்டம் முன்னால் துரத்தினால், துக்கம் பின்னால் துரத்தும் என்பது போல சதாவுக்கு எதுவுமே சாதகமாக இல்லாமல் போய் விட்டது. கடைசியாக அவர் நடித்து வெளியான,உன்னாலே உன்னாலே படமும் சதாவுக்கு கை கொடுக்கவில்லை.

சமீபத்தில், சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்தில் கிடைத்த வாய்ப்பும் சதாவை விட்டு துரதிர்ஷ்டவசமாக விலகிப் போனது. இப்படத்தை பிரபுதேவாதான் இயக்குகிறார். சிரஞ்சீவிதான் நாயகன்.

தமிழ், தெலுங்கில் இனி எதுவும் கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட சதா, இப்போது மலையாளத்தின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.

நாவல் என்று பெயரிடப்பட்ட படத்தில் சதா நாயகியாக நடிக்கிறார். ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் படத்தை இயக்குகிறார். ஜெயராம்தான் நாயகன்.

ஜெகதி, நெடுமுடி வேணு, சரிகா,இன்னொசன்ட் ஆகியோர் மற்ற கலைஞர்கள். அம்பாயி, ஜெயச்சந்திரன், பாலபாஸ்கர் ஆகியோர் இணைந்து இசையமைக்கின்றனர்.

நாவல் சதாவின் திரையுலக வாழ்க்கையின் அடுத்த அத்தியாத்தை சுபமாக ஆரம்பித்து வைக்குமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil