»   »  லீலை 'டிலே' - சதா கவலை!

லீலை 'டிலே' - சதா கவலை!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ரொம்ப காலத்திற்குப் பிறகு தமிழில் தான் நடித்து வரும் லீலை படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருவதால் சதா கவலையில் மூழ்கியுள்ளாராம்.

ஜெயம், அந்நியன் ஆகிய பிரமாண்ட வெற்றிப் படங்களில் நடித்தும் கூட தமிழில் பெரிய இடத்தைப் பிடிக்க முடியாமல் போனவர் சதா. இதனால் கவலையில் இருந்த சதா சில மாதங்களுக்கு முன்பு உன்னாலே உன்னாலே படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதா தமிழில் நடித்த அந்தப் படம் ஹிட் ஆனது.

ஆனாலும், சதாவின் கவலை மட்டும் ரிப்பீட் ஆனது. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் கவலையில் மூழ்கியிருந்த சதா, சமீபத்தில் ஒத்துக் கொண்ட படம் லீலை. இதுதவிர மேலும் 2 தமிழ்ப் படங்களிலும் நடிக்க ஒத்துக் கொண்டார். மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் சில படங்கள் அவரைத் தேடி வந்தன.

இதில் லீலை படம்தான் முடிந்துள்ளது. இதில் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சதா. மாதவனுடன் சதா இணையும் 3வது படம் இது.

ராம்கோபால் வர்மாதான் இப்படத்தின் தயாரிப்பாளர். படப்பிடிப்பு முடிந்தும் கூட ரிலீஸ் தள்ளிப் போகிறதாம். சில நிதிப் பிரச்சினையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் சதா கவலையில் மூழ்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப் படம் தாமதமாவதால், தமிழில் நான் நிலைத்து இருப்பது கேள்விக்குறியாகியுள்ளது. நவம்பர் இறுதிக்குள் லீலை வெளியாகும் என்று நம்புகிறேன்.

தற்போது நான்கு மொழிகளில் நான் நடித்து வருகிறேன். நான்கு மொழிப் படங்களிலும் வித்தியாசமான ரோல்களில் நடிக்கிறேன். பல மொழிகளில் நடிப்பது எனக்கு பிரச்சினையே இல்லை.

இந்தியில் கிளிக் என்ற படத்தில் நடிக்கிறேன். சங்கீத் சிவன் இயக்குகிறார். தெலுங்கில் நிதினுடன் தகரி என்ற படத்திலும், மலையாளத்தில் நாவல் என்ற படத்தில் ஜெயராமுடனும் இணைந்து நடிக்கிறேன் என்றார்.

Read more about: delay, leelai, sadha, worries

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil