»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாதவனுக்கு இது இரட்டை ஜோடி காலம் போலிருக்கிறது.

பிரியமான தோழியில் ஜோதிகா, ஸ்ரீதேவி என்று இருஅழகுப் பதுமைகளுடன் ஆடிப் பாடிய இவர் அடுத்து ஜேஜேவில் அமோஹா, பூஜா என இரு தேவதைகளுடன்ஜோடி கட்டினார்.

இந் நிலையில் மீண்டும் அவருக்கு அடித்திருக்கிறது இரட்டை ஜோடி லக்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் எதிரிபடத்தில் மாதவனுடன் ஜோடியாக நடிக்கப் போவது சதாவும் கனிஹாவும் (பைவ் ஸ்டாரில் நடித்தாரே அவர்தான்).

தாமினி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தில் அதிரடியான பாத்திரத்தில் கதாநாயகனாகநடிக்கிறார் மாதவன்.

தமிழ் சினிமாவில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டுள்ள ஹீரோயின் ஜெயம் சதாவும்உண்டு, மலையாளத்தைச் சேர்ந்த கனிஹாவும் ஜோடிகள்.

வேலையில்லாத பட்டதாரி இளைஞனாக மாதவன். ஒருவருக்கு உதவி செய்யப்போக பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்.

இறுதியில் ரவுடித்தனம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். அதனால் ஏற்படும்குழப்பங்களை விறுவிறுப்பாகச் சொல்வதே எதிரி என்கிறார், படத்தின் கே.எஸ்.ரவிக்குமார். (தமிழ் வாசனைவருதுங்கோ)

பொதுவாக ரவிக்குமார் ஒரு படத்தை இயக்குகிறார் என்றால், படபூஜை பற்றி முதலில் செய்தி வரும். அந்தப்படத்தைப் பற்றிய அடுத்த செய்தி, படம் ரிலீஸ் ஆகிவிட்டது என்பதாக இருக்கும். அந்த அளவுக்குதிட்டமிடுதலுடன் படத்தை விரைந்து முடிப்பவர்.

அதனால்தான் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்றுஅழைக்கப்படுகிறார்.

இந்தப் படமும் அதேபோல், குறுகிய கால தயாரிப்புதானாம். வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு பொழுது போக்கிக்கொண்டிருந்த ரகு என்ற ரஹ்மானை (சங்கமம் பட ஹீரோ) இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவைத்துள்ளார்களாம். இவர்களோடு விவேக், டெல்லி கணேஷ், பெப்ஸி விஜயன், மனோபாலா ஆகியோர்நடிக்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil