twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் டிவியில் வீரப்பன்

    By Staff
    |

    சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சந்தனக்காடு என்ற மெகா தொடர் பாமகவின் மக்கள் டிவியில் அக்டோபர் 15ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

    Click here for more images
    மொத்தம் 125 அத்தியாயங்ளைக் கொண்டதாக இந்த சீரியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வி.கெளதமன் இந்த சீரியலை இயக்கியுள்ளார். இதில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்படவுள்ளது.

    திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இந்த சீரியல் ஒளிபரப்பாகும்.

    வீரப்பனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து முக்கிய நிகழ்வுகளும் இதில் இடம் பெறுகின்றன. வீரப்பனின் நல்ல குணங்கள், மோசமான செயல்கள், தமிழ் மீது கொண்டிருந்த பற்று உள்ளிட்டவை இதில் விவரிக்கப்படவுள்ளன.

    இதுகுறித்து கெளதமன் கூறுகையில், வீரப்பனின் வாழ்க்கையில் இடம்பெற்ற அனைத்து முக்கிய சம்பவங்களும் இதில் இடம் பெறும்.

    காவல் நிலையங்கள் மீதான தாக்குதல், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல், கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினையின்போது தமிழர்கள் பட்ட சித்திரவதை, அதுதொடர்பாக வீரப்பன் மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை இதில் இடம்பெறும்.

    இந்தத் தொடரை ஒளிபரப்ப வீரப்பனின் மனைவி நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கியிருந்தார். அவரை சமாதானப்படுத்தி தற்போது தடையை விலக்கியுள்ளோம்.

    மேட்டூர், சத்தியமங்கலம் வனபப் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்த சீரியல் படமாக்கப்பட்டுள்ளது.

    அதிரடிப்படை வீரர்கள் அப்பாவி மலை வாழ் மக்களை சித்திரவதைப்படுத்திய சம்பவங்களும் கூட இதில் இடம் பெறுகின்றன என்றார் அவர்.

    Read more about: veerappan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X