»   »  சாய்மீராவின் பேருதவி!

சாய்மீராவின் பேருதவி!

Subscribe to Oneindia Tamil


சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டம் ஒன்றை பிரமீட் சாய்மீரா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு 24 தயாரிப்பாளர்களுக்கு ரூ. 2 கோடி வரை நிதியுதவி செய்யும் திட்டத்தை சாய்மீரா நிறுவனம் அறிவித்துள்ளது. சுருக்கமாக சொல்வதாக இருந்தால், சாய்மீரா நிறுவனத்தின் உதவியால் ஆண்டுக்கு 24 படங்கள் உருவாகவுள்ளன.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக பொங்கல் தினத்தன்று 12 தயாரிப்பாளர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கவுள்ளது சாய்மீரா நிறுவனம்.

இதுதொடர்பாக நடக்கும் விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இந்த அட்வான்ஸ் தொகையை வழங்கவுள்ளார்.

மேலும், புதுமுக இயக்குநர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்ய சாய்மீரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது போக, திறமையான பல உதவி இயக்குநர்கள், இயக்குநர்களாக அவதாரம் எடுக்கவும் உதவி செய்யவுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாய்மீரா நிறுவனத்தின் தலைவர் நடராஜன் கூறுகையில்,

சாய்மீரா நிறுவனம் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிப்பில் குதிப்பதால், திரையுலகுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் கூறியிருப்பது தவறு.

தமிழ் சினிமா குறித்த எதுவும் தெரியாமல் நாங்கள் இத்துறையில் ஈடுபடவில்லை. ஒரு தயாரிப்பாளராக நான் 50க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளேன். அதன் பிறகுதான் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் ஆனேன்.

கடந்த ஆண்டு 21 படங்களை நாங்கள் ரிலீஸ் செய்தோம். இதில் 18 படங்கள் சிறு பட்ஜெட் படங்களாகும். எனவே சேகரனின் கருத்து சாய்மீராவுக்குப் பொருந்தாது.

உண்மையில் திரைப்படத் துறை குறித்த அனுபவம் இல்லாமல் புகுந்துள்ள சிலரால்தான் துறைக்குப் பாதிப்பு என்றார் நடராஜன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil