»   »  சாய்மீராவின் அவ்வா

சாய்மீராவின் அவ்வா

Subscribe to Oneindia Tamil

தமிழ், மலையாளத்தில் பட விநியோகத்தில் இறங்கி வெற்றி கண்டுள்ள பிரமிட் சாய்மீரா நிறுவனம், முதல் முறையாக கன்னடத்தில் படத் தயாரிப்பில் குதித்துள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் படமாக அவ்வா உருவாகியுள்ளது.

தென்னிந்தியாவில் படு வேகமாக வளர்ந்து வரும் விநியோக நிறுவனம் பிரமிட் சாய்மீரா. இந்த நிறுவனம் ஏராளமான தியேட்டர்களையும் தன் வசம் வைத்துள்ளது.

தற்போது முதல் முறையாக கன்னடத்தில் தயாரிப்பில் குதித்துள்ளது சாய்மீரா. கவிதா லங்கேஷ் இயக்கத்தில் இந்த நிறுவனம் தயாரித்துள்ள படம் அவ்வா.

மறைந்த பி.லங்கேஷின் முஸ்ஸஞ்சய கதா பிரசங்கா என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் அவ்வா. படத்தை இயக்கியுள்ள கவிதா, லங்கேஷின் மனைவி ஆவார்.

இளம் நடிகர் விஜய், ஸ்ருதி, ரங்கையா ரகு, ஸ்மிதா, கர்நாடக முன்னாள் அமைச்சர் எம்.பி.பிரகாஷ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

ஆண்டுக்கு 10 முதல் 12 படங்களைத் தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தில் பல தியேட்டர்களை லீஸுக்கு எடுக்கவும் முடிவு செய்துள்ளது.

இத்தகவலை சமீபத்தில் சாய்மீரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil