»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தின் முன்னணி ஹீரோக்களின் சம்பளப் பட்டியல்:

ரஜினி: வழக்கமாக சொந்தப் படம் தான். சந்திரமுகிக்கு ரூ. 11 கோடி பிளஸ் ஆந்திரா, கர்நாடகா, ஜப்பான் ரிலீஸ்உரிமையை வாங்கிருக்கிறார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 22க்கு குறையாதாம்.

கமல் ஹாசன்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கு இவர் வசூல் செய்த சம்பளம் ரூ. 5 கோடி

விஜய்காந்த்: சம்பளம் ரூ. 3 கோடி. பணமாக ரூ. 2.5 கோடியையும் ரூ. 50 லட்சம் மதிப்பிலான மதுரை ஏரியாவினியோக உரிமையையும் வாங்கிக் கொள்வார்.

விஜய்: மதுர படத்தின் மூலம் ரூ. 4 கோடியைத் தொட்டுவிட்டார். சில காலத்துக்கு முன் தொடர் பிளாப்கள்தந்தபோதும் சம்பளத்தை ரூ. 2.5 கோடிக்கு சல்லி காசு குறைக்காதவர்.

விக்ரம்: சம்பளமாக ரூ. 6 கோடி வரை கொடுக்க சிலர் முன் வந்தபோதும் நோ சொல்லிவிட்ட வித்தியாசமானமனிதர். அதிகபட்சமாக ரூ. 2.5 கோடி தான் வாங்குகிறார். வேண்டியவர்களிடம் இன்னும் கூட குறைத்துக்கொள்கிறார். சம்பளத்தை எப்போதுமே இரண்டாம் பட்சமாக வைத்திருப்பவர்.

அஜீத்: தோல்விகளையே தொடர்ந்து கொடுத்து ரெக்கார்ட் பிரேக் செய்து வருபவர். ஆனால் சம்பள விஷயத்தில்மகா கெடுபிடியானவர். இவரது சம்பளம் ரூ. 2.5 கோடி.

தனுஷ்: ரூ. 30 லட்சத்தில் ஆரம்பித்து சரசரவென ரூ. 2 கோடிக்கு ஏணி போட்டு ஏறியவர். இவரை புக் செய்தபோதுரூ. 1 கோடி பேசியவர்களிடம் கூட கூடுதலாக தொகை கேட்டு நச்சு செய்தார் இவரது அப்பா கஸ்தூரிராஜா.சம்பளமாக பணம் மட்டுமல்லாமல் தயாரிப்பாளரின் பங்களா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களையும் வாங்கியவர்.

சூர்யா: விக்ரம் மாதிரியே பண விஷயத்தில் கூச்ச சுபாவி. காக்க.. காக்கவுக்கு வாங்கியது ரூ. 75 லட்சம்,பிதாமகனுக்கு ரூ. 80 லட்சம். இப்போது மாயாவி மூலம் இவரது ரேட்டை ரூ. 1 கோடியாக்கியிருக்கிறார் இயக்குனர்பாலா.

சரத்குமார்: படம் ஓடுகிறதோ இல்லையோ ரூ. 1 கோடியை வாங்கிவிடுவார். ரொம்ப வேண்டியவர்கள் என்றால் ரூ.10 லட்சம் குறையும்.

மாதவன்: இவரை ஒரு விரல் கிருஷ்ணாராவ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ரூ. 1 கோடிக்குக் குறைவாகக்கொடுத்தால் திரும்பிக் கூட பார்க்க மாட்டார். இதனால் இவரை வைத்து படமெடுக்க யாரும் தயாராக இல்லை.ஆனாலும் ரொம்ப பிடிவாதமாய் ஒற்றை விரலை மடக்காமல் அப்படியே வைத்திருக்கிறார்.

சிலம்பரசன்: இந்தா கால்ஷீட்டு.. குடுடா ஒரு நோட்டு என்று அப்பா பாணியில் வசனம் எடுத்துவிட்டு ரூ. 1 கோடிகேட்டவர். அடுத்தடுத்த பிளாப்களால் ரூ. 75 லட்சத்துக்கு வந்திருக்கிறார். மன்மதன் படத்தின் மூலம் மார்க்கெட்டைமீண்டும் பிடித்து சம்பளத்தை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

அர்ஜூன்: சிரபுஞ்சியில் மழை பெய்வது மாதிரி, லாபமோ நஷ்டமோ இவரது படங்கள் மட்டும் விடாமல் வந்துகொண்டே இருக்கும். போஸ்டர் பாய்கள் அதிகமாய் ஒட்டியது இவரது பட போஸ்டராகத் தான் இருக்கும். இரண்டுமாசத்துக்கு ஒண்ணு என்று எடுத்து விட்டுக் கொண்டே இருப்பார்.

யாரும் தன்னை வைத்து படம் எடுக்காவிட்டால் தானே எடுத்துக் கொள்வார். சம்பளம்... மிரண்டுவிட வேண்டாம்,ரூ. 1 கோடி. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, சொந்த ஊரான கர்நாடகம் என்று எந்த மொழி சினிமாவையும்விடுவதில்லை.

பார்த்திபன்: ரூ. 65 லட்சம் தந்தால் நடிப்பார். சம்பாதித்த காசை நானே இயக்குவேன் என்று அடம் பிடித்துசினிமாவிலேயே விட்டுவிடுவார். அக்மார்க் சினிமா கிறுக்கர்.

பிரஷாந்த்: இப்போதைய இளம் நாயகர்களிலேயே முதன்முதலில் சினிமாவுக்கு வந்தவர் இவர் தான். கிட்டத்தட்டமுத்திக் கொண்டிருப்பவர். ஆனால், இதுவரை பெயர் சொல்லும்படி எந்தப் படமும் இல்லை. சம்பளமும்அதிகமில்லை. ரூ. 45 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை ஏறும், இறங்கும்.

ஸ்ரீகாந்த்: நடித்த 5,6 படங்களிலேயே ரூ. 40 லட்சத்தைத் தொட்டுவிட்டார். போஸ் படத்துக்கு வாங்கியிருப்பது ரூ.50 லட்சமாம்.

சத்யராஜ்: இவர் நிலைமை ரொம்ப மோசம். ரூ. 40, 50 லட்சம் என்று வாங்கிக் கொண்டிருந்தவர் இப்போதுஇருக்கிறதைக் கொடு என்று சொல்லி நடிக்கிறார். ரூ. 20 லட்சத்தைவிடவும் கீழே போய்விட்டு இப்போது மீண்டும்ரூ. 25 லட்சத்துக்கு வந்திருக்கிறார். இவர் கால்ஷீட் வாங்கினால் மகன் சிபியின் கால்ஷீட் சலிசு விலைக்குக்கிடைக்கும்.

மம்மூட்டி: கேரளாவில் ஒரு ரேட். தமிழ்நாட்டில் நல்ல ரேட். கேரளாவில் 20 லட்சம் சம்பளமும் பன்னும் டீயும்வாங்கிக் கொடுப்பார்கள். இங்கு வந்தால் ரூ. 30 லட்சத்துக்கு குறையாமல் கேட்பார். அத்தோடு கேரளாரைட்ஸையும் வாங்கிவிடுவார். இதில் பல லகரங்கள் தேறிவிடும்.

முரளி: ரூ. 15 லட்சம் கேட்கிறார். அப்படியே கதையின் ரீ-மேக் உரிமையையும் சைடில் வாங்கி தெலுங்கு,கன்னடத்தில் விற்று சில லகரங்களைப் பார்த்துவிடுவார்.

விவேக்: படத்துக்கு ரூ. 20 முதல் ரூ. 25 லட்சம் கேட்கிறார். ஹீரோவாக நடிக்க சான்ஸ் கொடுத்தால் சம்பளத்தில்விட்டுத் தருகிறார்.

வடிவேலு: இவரிடம் சம்பளம் குறித்து பேசும் தயாரிப்பாளர்களிடம், விவேக் வாங்குறதைவிட 1 ரூபா கூடகொடுங்க என்பார். ஒத்த பைசா குறையாமல் வசூலித்துவிடுவார். இப்போது 20 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மிக பிஸியாக இருப்பதால் சில படங்களில் டெய்லி இவ்வளவு என்ற ரேட்டுக்கு நடித்து பணம்குவித்துக் கொண்டிருக்கிறார். (ரம்பாவின் பங்களாவை விலை பேசிக் கொண்டிருக்கிறார்)

அப்பாஸ், குணால் போன்றவர்களுக்கும் படங்கள் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. குணாலுக்குமும்பைக்குப் போக வர பிளைட் செலவு, பிளஸ் ரூ. 7 முதல் 10 லட்சம் கொடுத்தால் நடிக்கத் தயாராக இருக்கிறார்.

அப்பாசுக்கு அடிக்கடி பெங்களூர்-சென்னை இடையிலான பிளைட் போக்குவரத்து செலவு, ஹோட்டல் செலவு,பிளஸ் ரூ. 7 முதல் ரூ. 10 லட்சம் வரை சம்பளம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil