»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் போட்டி கடுமையாகிவிட்டதால், நடிகர்-நடிகைகள் மத்தியில் புதிய மாற்றம் தெரியஆரம்பித்திருக்கிறது.

என்னால தான படம் ஓடுது.. இவ்வளவு குடு என்று தயாரிப்பாளரை தட்டேந்த வைத்து வந்த பலரும் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

நீங்கள் எதிர்பார்க்கும் மெகா சம்பளக்காரர்களான விஜய், த்ரிஷா போன்றவர்கள் எல்லாம் இதில் இல்லை.

ஆனால், இந்த விட்டுக் கொடுத்தலில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் விஜய்காந்த் தானாம். சமீபத்தில் பிரச்சனைகளுக்கு மத்தியில்வெளிவந்த கஜேந்திரா படத்தில் விஜய்காந்த்துக்கு ரூ. 1 கோடி சம்பள பாகி வைத்துவிட்டார் துரை.

முதலில் அதை வாங்கியே தீருவது என்ற முடிவில் இருந்த விஜய்காந்த், பின்னர் படம் சரியாகப் போகாததையும் தயாரிப்பாளர்நஷ்டப்பட்டதையும் உணர்ந்து ரூ. 1 கோடியை விட்டுத் தந்துவிட்டாராம். இதே போல நெறஞ்ச மனசு படத்தின் தயாரிப்புசெலவுக்கும் பெரும் உதவி செய்தாராம் விஜய்காந்த்.

தயாரிப்புச் செலவு அதிகமானதைக் கேள்விப்பட்ட இந்தப் படத்தின் புதுமுக ஹீரோயின் சூசனும் தான் பேசிய சம்பளத்தில் பெரும்பகுதியை குறைத்துக் கொண்டாராம்.

இதே போலத்தான் ஸ்ரீகாந்த். இவரும் ஸ்னேகாவும் நடித்த போஸ் படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் ரூ. 15 லட்சத்தைதயாரிப்பாளரிடமே திருப்பித் தந்துவிட்டாராம். படம் வெற்றி பெற்றாலும் வசூலில் தயாரிப்பாளருக்கு பெரிதாக ஏதும்தேறவில்லை. லாபத்தை அனுபவித்தவர்கள் எல்லாம் வினியோகஸ்தர்களே.

இதையடுத்து தயாரிப்பாளரின் வீடு தேடிப் போய் ரூ. 15 லட்சத்தைத் திருப்பித் தந்துவிட்டுவிட்டு வந்திருகிறார் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் விட்டுத் தந்தால் அவருக்கு ரொம்ப வேண்டிய ஸ்னேகா சும்மா இருப்பாரா, அவரும் தயாரிப்பாளரை வீட்டுக்கேகூப்பிட்டு வாங்கிய ஊதியத்தில் ரூ. 8 லட்சத்தைத் திருப்பித் தந்து அனுப்பியிருக்கிறார்.

அஜீத் நடித்த அட்டகாசம் படத்தின் இறுதிக்கட்டத்தின்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் கையில் காசில்லாமல் விழிபிதுங்கிநிற்க, காசை அள்ளிவிட்டிருக்கிறார் அஜீத். பிரிண்ட் போடப்பட்ட லேபுக்கு ரூ. 1.5 கோடி கட்டினால் தான் படத்தை எடுக்கமுடியும் என்ற சூழல் உருவாக, ஒரு பைனான்சியரிடம் அவ்வளவு பெரிய பணத்தை வட்டிக்கு வாங்கித் தந்திருக்கிறார் அஜீத்.

படம் நன்றாகப் போவதால் அஜீத் சிக்கலின்றி தப்பிவிட்டார். ஆனாலும் இவ்வளவு பெரிய பண விஷயத்தில் அவர் எடுத்தரிஸ்க்கை இயக்குனர் சரண் உள்பட பலரும் வாய் நிறையப் பாராட்டுகிறார்கள்.

மேலும் ருமேனியாவுக்குச் சென்ற இந்தப் படக் குழு அலிடாலியா விமான நிறுவனம் செய்த குளறுபடியால் அங்கேயே சிக்கிக்கொள்ள, மொத்த யூனிட்டுக்கும் தனது சொந்தப் பணம் ரூ. 15 லட்சத்தில் டிக்கெட்டுகளை எடுத்து அனைவரையும் பத்திரமாகஊருக்குக் கொண்டு வந்து சேர்த்தாராம்.

இதே போல மன்மதன் படமும் பணமில்லாமல் தடுமாற, சிம்பு தனது அப்பா விஜய டி.ராஜேந்தரிடம் ரூ. 1.25 கோடி வாங்கித் தந்துஉதவியிருக்கிறார். மேலும் தனது சம்பளத்தில் ரூ. 53 லட்சத்தையும் குறைத்துவிட்டாராம். இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு ரூ.8 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil