»   »  பார்த்தேன் ரசித்தேன் .. சல்மான்!

பார்த்தேன் ரசித்தேன் .. சல்மான்!

Subscribe to Oneindia Tamil

பிரஷாந்த், லைலாவின் அழகிய நடிப்பில் மெகா ஹிட் ஆன பார்த்தேன் ரசித்தேன் படம் இந்திக்குப் போகிறது. சல்மான் கான் பிரஷாந்த் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார்.

கள்ளழகர் மூலம் தமிழுக்கு வந்த லைலாவுக்கு அந்தப் படம் உள்பட எந்தப் படமுமே பிரேக் கொடுக்கவில்லை. பார்த்தேன் ரசித்தேன் மூலம்தான் லைலா தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகையானார். அதற்கு முன்பு வந்த படங்களில் எல்லாம் அவர் வந்து போனார் அவ்வளவுதான்.

பார்த்தேன் ரசித்தேனில் அவரது நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டது, பாராட்டப்பட்டது. பிரஷாந்த்துக்கும் கூட இந்தப் படம்தான் மிகப் பெரிய ஹிட் ஆனது. அதுவரை ஹீரோயினாக அசத்திக் கொண்டிருந்த சிம்ரன் இந்தப் படத்தில் வில்லத்தனம் காட்டி கலக்கியிருந்தார்.

சரண் இயக்கத்தில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் இப்போது இந்திக்குப் போகிறது. இந்தியிலும் சரணே இப்படத்தை இயக்கவுள்ளார். இதில் பிரஷாந்த் கேரக்டரில் நடிப்பதற்காக சல்மான் கானை அணுகி கதை சொல்லியுள்ளார் சரண்.

சல்மானுக்குக் கதை பிடித்துப் போய் விட்டது. தற்போது நடித்து வரும் போக்கிரி ரீமேக்கை முடித்து விட்டு இந்தப் படத்தை ஆரம்பிக்கலாம் என்று சரணிடம் கூறியுள்ளாராம் சல்மான்.

சமீப காலமாக தமிழ் சூப்பர் ஹிட்கள், இந்திக்கு இடம் பெயர்ந்து கலக்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே ஆமிர்கான் நடிப்பில் கஜினி ரீமேக் ஆகி வருகிறது. சல்மான் கான் போக்கிரி படத்தை ரீமேக் செய்து வருகிறார். இந்த நிலையில் மறுபடியும் ஒரு தமிழ் ரீமேக்கில் சல்மான் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil