»   »  இந்தி போக்கிரியில் சல்மான் இல்லை?

இந்தி போக்கிரியில் சல்மான் இல்லை?

Subscribe to Oneindia Tamil
Ayesha Taki
இந்தியில் ரீமேக் ஆகி வரும் போக்கிரி படத்தில் சல்மான் கானை மாற்றி விட தயாரிப்பாளர் போணி கபூர் தீர்மானித்துள்ளாராம்.

பிரபுதேவா தமிழில் முதலில் இயக்கிய படம் போக்கிரி. விஜய், ஆசினின் அட்டகாச நடிப்பு, வடிவேலுவின் வெடிக் காமெடி, பிரபுதேவாவின் திறமையான இயக்கம், அசத்தல் டான்ஸ் என சகல வெற்றி அம்சங்களும் இடம் பெற்றிருந்த போக்கிரி பெரும் வெற்றி பெற்ற படமாகும்.

இப்போது இந்தப் படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போணி கபூர் இந்தியில் ரீமேக் செய்கிறார். பிரபுதேவாதான் இதையும் இயக்குகிறார். சல்மான்கான் ஹீரோவாக்கப்பட்டார்.

அவருக்கு ஜோடியாக ஆசினையே போடலாம் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஆசின் தசாவதாரம், வேல், இந்தி கஜினி என படு பிசியாக இருந்ததால், தீபிகா, கங்கனா ரணவத் என பரிசீலித்து கடைசியில் ஆயிஷா டாக்கியாவை ஜோடியாக்கி படப்பிடிப்பையும் ஆரம்பித்னர்.

ஆயிஷாவின் நடனம் மீது பிரபுதேவாவுக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதால் அவரைப் போடலாம் என போணியிடம் பிரபுதேவா ஆலோசனை கூறினாராம். இதனால் ஆயிஷாவுக்கு அடித்து லக்கி பிரைஸ்.

படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே மான் வேட்டை வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று விட்டார் சல்மான் கான். இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் கூட சரிவர படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார்.

இதனால் கடுப்பான ஸ்ரீதேவியும், போணி கபூரும் சல்மான் கானை மாற்றி விட தீர்மானித்துள்ளனராம். இதனால் புதிய ஹீரோவைத் தேடும் வேலை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil