»   »  சந்தியாவின் மாலை நேரத்து மயக்கம்

சந்தியாவின் மாலை நேரத்து மயக்கம்

Subscribe to Oneindia Tamil

செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் காதல் சந்தியா.

செல்வா சமீபத்தில் தெலுங்கில் இயக்கிய அடவரி மடலுகு அர்த்தலே வெருளே படம் ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதையடுத்து தொடர்ந்து தெலுங்கில் இயக்க பல தயாரிப்பாளர்கள் செல்வாவை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், அதை அன்போடு தவிர்த்து விட்ட செல்வா, மீண்டும் தமிழுக்குத் திரும்புகிறார்.

கார்த்தி, சந்தியாவை வைத்து இது மாலை நேரத்து மயக்கம் படத்தை இயக்கவுள்ளார்.

அத்தோடு அடவரி படத்தின் ரீமேக்கான யாரடி நீ மோகினி படத்தையும் சூப்பர் வைஸ் செய்து வருகிறார். தம்பி தனுஷ்தான் இதில் நாயகன்.

பரட்டை என்கிற அழகுசுந்தரம் தனுஷை கவிழ்த்து விட்டு விட்டதால் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்க வேண்டிய கட்டாயத்தில் தனுஷ் குடும்பம் உள்ளது.

இப்படத்தை முடித்து விட்டு 7ஜி ரெயின்போ காலனியின் இந்திப் பதிப்புக்குத் தாவுகிறார் செல்வராகவன்.

ரெயின்போ காலனியில் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகன் ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார்.

அவரது குப்பாச்சு வசன உச்சரிப்பையும் மீறி, சோனியா அகர்வாலின் நடிப்பு, யுவன் ஷங்கர் ராஜாவின் மயக்கும் இசை, செல்வராகவனின் இயக்கத்தால் படம் மெகா ஹிட் ஆனது.

இப்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். அதையும் செல்வராகவனே இயக்கவுள்ளார். ஹீரோவாக நடிக்கவிருப்பது புதுமுகமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil