»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

முதல் படமான சமுராயின் தோல்வியால் சில வருடங்கள் கோலிவுட்டில் படாதபாடுபட்ட இயக்குனர் பாலாஜி சக்திவேலை காதல்படம் உச்சத்தில் போய் நிறுத்திவிட்டது.

இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றியால் மகிழ்ந்து போன இயக்குனர் ஷங்கர் (இவர் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்)பாலாஜிக்கு ஒரு போர்ட் ஐகன் காரை வாங்கி பரிசளித்துவிட்டார்.

கார் ஓட்டத் தெரியாத பாலாஜி அதை அப்படியே தனது மனைவிக்குத் தந்துவிட்டாராம். இவர் மதுரையில் கல்லூரிப்பேராசிரியையாக உள்ளார்.

இந்தப் படத்தின் வசூலும், இன்டஸ்ட்ரியில் கிடைத்துள்ள மரியாதையும் பாலாஜியைவிட ஷங்கரை பெரும் ஆச்சரியத்தில்ஆழ்த்திவிட்டதாம்.

சமீபத்தில் இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரையே இதன் கதை, போக்கு, புதிய நடிகர்களைதேர்வு செய்த விதம் ஆகியவை மிகவும் அசைத்துப் பார்த்துவிட்டதாம். போன் பண்ணி வாழ்த்தினால் போதாது என்று நினைத்தகே.பி. காரை எடுத்துக் கொண்டு ஷங்கரின் ஆபிசில் போய் சொல்லாமல் கொள்ளாமல் இறங்கியிருக்கிறார்.

விஷயம் அறிந்து அந்நியன் சூட்டிங்கில் இருந்து ஷங்கர் அடித்துப் பிடித்து ஓடி வந்திருக்கிறார். பாலாஜியையும் இதில் நடித்தஹீரோயின் சந்தியாவையும் கே.பி. பார்க்க ஆசைப்படுவதை உணர்ந்த ஷங்கர் இருவரையும் கார் அனுப்பி உடனே ஆபிசுக்குவரவழைத்தாராம்.

பாலாஜியைக் கட்டிப் பிடித்து பாலசந்தர் பாராட்ட, உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிவிட்டாராம் இயக்குனர்.

பின்னர் சந்தியாவைப் பார்த்து, நீ சரிதா மாதிரி நடிச்சிருக்கே. பிரமாதமா வருவே என்று சொல்லிவிட்டுப போனாராம்.

இது நடந்த அடுத்த இரண்டாவது நாளில் இன்னொரு இன்ப அதிர்ச்சி பாலாஜி சக்திவேலுக்கு.

படத்தைப் பார்த்துவிட்டு நேரில் வந்த இயக்குனர் பாலா, உண்மையிலேயே சொல்றேன். உருகிட்டேன் பாலாஜி, கதையில என்னஒரு ஆழம், அதை எப்படி இவ்வளவு அழகா படமா எடுத்தீங்களோ தெரியலை என்று பாராட்டிவிட்டு, சும்மா போகாமல் நான்தயாரிக்கும் அடுத்த படத்தை நீங்கள் தான் இயக்குகிறீர்கள் என்று சொல்லி அட்வான்ஸையும் கையில் கொடுத்துவிட்டுப்போய்விட்டாராம்.

மாயாவி படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள பாலாவின் அடுத்த படம் பாலாஜிக்கு வந்துவிட்டது.

அதே நேரத்தில் தனக்கு வாழ்வு தந்த ஷங்கருக்காக இன்னொரு படத்தை எடுத்துத் தந்துவிட்டுத் தான் பாலாவின் படத்தைஇயக்கப் போகிறாராம் பாலாஜி.

ஷங்கரிடம் உதவியாளராக இருந்த பாலாஜிக்கு சமுராய்க்குப் பிறகு யாரும் வாய்ப்புத் தரவில்லை. சென்னையில் மேன்சனில்தங்கியபடி, யார் யாரிடமோ கதை சொல்லிப் பார்த்து ரிஜக்ட் செய்யப்பட்ட பாலாஜி கடைசியில் மீண்டும் ஷங்கரிடமே வந்துகாதல் கதையைச் சொல்லியிருக்கிறார்.

கதை கேட்டு அசந்து நின்ற ஷங்கரிடம், ரூ. 2 கோடி மட்டும் கொடுங்க.. பணத்துக்கும் படத்துக்கும் நான் கியாரண்டி என்றுஅடித்துப் பேசியிருக்கிறார் பாலாஜி.

ஷங்கரும் தனது நண்பர்-கம்- உதவியாளரான பாலாஜிக்காக அந்நியன் படத் தயாரிப்புக்கு மத்தியிலும் 2 கோடியை ஒதுக்கிக்கொடுத்துள்ளார்.

சொல்லி வைத்த மாதிரியே ஷங்கருக்கு பல மடங்கு லாபத்தை ஈட்டித் தந்துவிட்டது காதல்.

ஆனாலும் பணத்தைவிட பாலாஜியின் முகத்தில் தெரியும் சந்தோஷம் தான் எனக்குக் கிடைத்த பெரிய சந்தோஷம் என்கிறார்ஷங்கர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil