»   »  சானியாவை குறி வைக்கும் சிம்பு!

சானியாவை குறி வைக்கும் சிம்பு!

Subscribe to Oneindia Tamil

அப்பாவைப் போலவே ரொம்ப வம்பு புடுச்ச ஆளா வருவார் போலிருக்கும் சிம்பு.

தனக்கு ஜோடியாக டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸாவை போட என்று முயற்சித்து வருகிறார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியாவின் மீது சிம்புவுக்கு மட்டுமல்ல தெலுங்கு சினிமா உலகிலும் பயங்கர மோகம். கோடிக்கணக்கில் சம்பளம் பேசிஅவருக்கு தூண்டில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கு சினிமாக்காரர்கள் சானியாவை முயற்சி செய்வதைக் கேள்விப்பட்டு இந்தித் திரையுலக ஜாம்பவான்களும் பெட்டிகளுடன் ஹைதராபாத்துக்கு வந்துசானியா குடும்பத்தினரிடம் பேசிவிட்டுப் போய்விட்டார்கள்.

ஹைதரபாத் பெண்ணான தபு இந்தியில் ஒரு ரவுண்ட் வந்ததை விட மிக வெற்றிகரமாகவே உங்கள் மகளும் வருவார் என்று பேசியுள்ளனர். ஆனால், இப்போதுமுழுக் கவனத்தையும் டென்னிசில் காட்டி வரும் சானியா இப்போதைக்கு சினிமாவுக்கு வர மாட்டார் என்று கூறி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்,அவரது வீட்டில்.

ஆனாலும் சானியாவைத் தேடிப் போகும் சினிமாக்காரர்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியே தான் இருக்கிறது.

சானியாவுக்கும் அவரது வீட்டினருக்கும் கூட சினிமா மீது ஒரு கண் இருப்பதாகவே சொல்கிறார்கள்.


டென்னிஸோடு நிறுத்திக் கொள்ளாமல் மும்பையில் பேஷன் ஷோக்களில் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார் சானியா. சும்மா ஷோவுக்கு போனோமாஎன்றில்லாமல் ரேம்ப்களிலும் ஏறி மாடலாக, ஒய்யாரமாக நடக்கவும் ஆரம்பித்துள்ளார்.

கூடவே முக்கியமான சில பிராண்ட்களுக்கு விளம்பர மாடலாகவும் ஒப்பந்தமாயிருக்கிறார். எல்லாமே சானியாவுக்கு பல கோடிகளை ஈட்டித்தந்துள்ளனவாம்.

டென்னிசில் தன்னால் முடிந்தவரை சாதித்துவிட்டு நிச்சயமாக அவர் சினிமாவுக்கு வருவார் என்றே தெரிகிறது.


இப்படி அவருக்கு இந்தி, தெலுங்கு திரையுலகில் வலை வீசப்பட்டு வரும் நிலையில் மன்மதன் சிம்புவுக்கும் சானியாவின் மீது கிரேஸ் வந்துவிட்டது.

மன்மதன் கொடுத்த வெற்றியால் கொஞ்சம் போல ஹெட் வெயிட் கூடியுள்ள சிம்பு இப்பெல்லாம் ரொம்பவே பெரிய லெவலில் தான் பேசுகிறார்,முயற்சிக்கிறார்.

தொட்டி ஜெயாவுக்கு அடுத்தபடியாக, வல்லவன் என்ற படத்தில் 3 ரோல்களில் நடிக்கிறார். இதில் சிம்புவுக்கு காதல் சந்தியா, ரீமா சென், நயனதாராஆகிய ஜோடிகள்.

இதையடுத்து பி.எப் சூர்யாவின் இயக்கத்தில் ஏசி என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இதில் சிம்புவுக்கு ஜோடி ஆஷின்.

இந்தப் படங்களைத் தொடர்ந்துஅடுத்த படத்தில் சானியாவுடன் ஜோடி சேர சிம்புவுக்கு ஆசையாம். இந்த 3 படங்களும் முடியவே ஒன்றரை வருடம் வரைஆகிவிடும் என்பதால், அதற்குள் சானியாவையும் பேசி சரிக்கட்டலாம் என நினைக்கிறாராம்.

பேச்சோடு நிறுத்தாமல் அதற்கான வேலைகளிலும் சீரியஸாகவே இறங்கியிருக்கிறாராம் சிம்பு.

சானியாவை மையமாக வைத்தே ஒரு கதையைக் கூட தயார் செய்துவிட்டார் சிம்பு என்கிறார்கள்.

கொசுறு: மன்மதன் மிகப் பெரிய வசூலை குவித்ததால் வருமான வரித்துறையினரின் கண்காணிப்பில் இருக்கிறாராம் அதன் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil