»   »  மீண்டும் 'ஆக்ஷ்னில்' சஞ்சய் தத்!

மீண்டும் 'ஆக்ஷ்னில்' சஞ்சய் தத்!

Subscribe to Oneindia Tamil
Sajnay with manyata
சிறைவாசத்திலிருந்து மீண்டு வெளியே வந்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஏ.கே. 56 ரக துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறி ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் சஞ்சய் தத் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து புனே, எரவாடா சிறையில் சஞ்சய் தத் அடைக்கப்பட்டது. அவருக்கு முதலில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் சமீபத்தில் முழு அளவிலான ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சஞ்சய் தத் தனது காதலி மான்யதாவுடன் கோவா சென்று ஓய்வெடுத்தார்.

ஓய்வை முடித்து மும்பை திரும்பிய அவர் நேற்றிலிருந்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

நேற்று பந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் நடந்த சுனில் ஷெட்டியின் சொந்தத் தயாரிப்பான ஈசி மன்த்லி இன்ஸ்டால்மென்ட் (இ.எம்.எஐ) படத்தின் ஷூட்டிங்கில் சஞ்சய் தத் கலந்து கொண்டார். இப்படத்தில் அர்ஜூன் ராம்பால், ஆசிஷ் செளத்ரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் தத், மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளது சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நான் கடனை வசூலிக்கும் ஏஜென்ட் சத்தார் பாய் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அனைவரும் இந்த கேர்கடரை விரும்புவார்கள் என்றார்.

சிறைக்குப் போவதற்கு முன்பாக இப்படத்தின் சில காட்சிகளில் சஞ்சய் தத் நடித்திருந்தார். இடையில் சிறைக்குப் போய் விட்டதால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் சஞ்சய்க்கு ஜோடியாக ஊர்மிளா மடோன்கர் நடிக்கிறார்.

இதுதவிர மிஸ்டர் பிராட், கிட்னாப், அலிபாக் ஆகிய படங்களிலும் சஞ்சய் தத் நடிக்கவுள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil