»   »  சரண்யாவின் விளையாட்டு

சரண்யாவின் விளையாட்டு

Subscribe to Oneindia Tamil

காதல் படத்தில் நாயகி சந்தியாவின் தோழியாக வந்த சரண்யா, முதல் முறையாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்து அனைவரையும் கவர்ந்த சரண்யாவை யாரும் மறந்திருக்க முடியாது. சோடாபுட்டி கண்ணாடியுடன் அழகாக பேசி நடித்தவர்தான் சரண்யா.

அவர்தான் முதலில் இப்படத்தில் நாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சந்தியா ஓவர்டேக் செய்து விட்டார். இருந்தாலும் சரண்யாவை விட மனம் இல்லாமல் அவரை சந்தியாவின் தோழி ஆக்கி விட்டார் பாலாஜி சக்திவேல்.

காதல் படம் சந்தியாவுக்கு பெரும் பெயரை வாங்கித் தந்தது. ஆனால் சரண்யாவுக்கு தெலுங்கில்தான் வரவேற்பு கிடைத்தது. அங்கு ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சரண்யா. சும்மா சொல்லக் கூடாது, கவர்ச்சியில் பின்னி எடுத்திருந்தார் அப்படத்தில். அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் வரவில்லை.

இந்த நிலையில்தான் விளையாட்டு பட வாய்ப்பு கிடைத்தது. எழில்வேந்தன் என்பவர் இயக்கி, ஹீரோவாக நடிக்கும் படம்தான் விளையாட்டு. இவர் கேமராமேன் செல்வாவின் உதவியாளர். படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கிறார் எழில்வேந்தன்

இந்தப் படத்தில் ஹாலிவுட் பார்ட்டி ஒருவரும் நடிக்கிறார். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், தி எக்ஸ்டிரார்டினரி, ஸ்டேக்அவுட், டிரீம்ஸ் கேப் என பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளவர் ஆண்ட்ரூஸ். விளையாட்டு படத்தில் அவரும் இருக்கிறார்.

ஆஸ்திரேலிய வாழ் தமிழரான கண்ணன் என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார். இவருக்கும், கோலிவுட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. போக்கிரி, வரலாறு, ரெண்டு என 50க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை ஆஸ்திரேலியாவில் விநியோகம் செய்த அனுபவம் கொண்டவர் கண்ணன். இப்போது தயாரிப்பாளராகியுள்ளார்.

இவர்களைத் தவிர பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சீமா ஆகியோரும் படத்தில் உள்ளனர். இவர்களில் சீமா படு ஜோராக இருக்கிறார். படத்தின் கவர்ச்சி களேபரத்தை இவர்தான் ஒத்தை ஆளாக சமாளிக்கப் போகிறாராம்.

நல்லா விளையாடுங்கப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil